பாகிஸ்தானுக்கு நெருக்கடி: ராணுவ தளபதி தகவல்| "Pressure Is On Pak": Army Chief On Terror Funding Watchdog FATF's Move | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானுக்கு நெருக்கடி: ராணுவ தளபதி தகவல்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (6)
Share
Pressure,  Pak, Army Chief, Terror Funding Watchdog, FATF, Move, பாகிஸ்தான், பாக்., ராணுவ தளபதி, எப்.ஏ.டி.எப்., எப்ஏடிஎப்,

புதுடில்லி: பாகிஸ்தானை தொடர்ந்து ' கிரே' பட்டியலில் வைத்திருக்க, எப்.ஏ.டி.எப்., எடுத்த முடிவு அந்நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, 'ஜி - 7' அமைப்பை சேர்ந்த நாடுகளால், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, 1989-ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில் பாகிஸ்தானை அடுத்த ஆண்டு, பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கறுப்பு பட்டியலில் சேர்ப்போம் எனவும் பாகிஸ்தானிற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில், '' பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எப்ஏடிஎப் உத்தரவை எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுப்பது என்பது அந்நாட்டின் நடவடிக்கைகளில் தெரியும். எப்ஏடிஎப் உத்தரவுகளை பாகிஸ்தான் பின்பற்ற வேண்டும் எனவும் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்பது நமது எண்ணம். தொடர்ந்து, 'கிரே' பட்டியலில் இருப்பது எந்த நாட்டிற்கும் பின்னடைவு '' எனக்கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X