சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணன் இறந்த துக்கத்தில் கதறி அழுத தங்கையும் மரணம்

Added : அக் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ாமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல், கதறி அழுத தங்கையும் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, பாம்பன் அக்காள்மடத்தைச் சேர்ந்தவர், மீனவர் செல்வஇளமாறன், 52. இவருக்கு சகோதர, சகோதரிகள், நால்வர் உள்ளனர்.இவரது மூன்றாவதுதங்கை சாந்தி, 38. அண்ணன், தங்கை இருவரும், அருகருகே உள்ள வீடுகளில், தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.நேற்று முன்தினம், திடீரென செல்வஇளமாறன் மயங்கி விழுந்து, உயிரிழந்தார். அண்ணன் சடலத்தை பார்த்து, கதறி அழுத சாந்தியும், மயங்கி விழுந்துஉயிரிழந்தார்.அண்ணன் இறந்த, மூன்று மணி நேரத்தில் தங்கை இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.படம் : உயிரிழந்த செல்வஇளமாறன், சாந்தி படம் உண்டு.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
21-அக்-201915:36:51 IST Report Abuse
Sridhar Rengarajan அண்ணன் இறப்பை கேட்ட தங்கை மரணம். 60 வருடங்களுக்கு முன் வந்த அந்தக்கால பாசமலர் படத்தில்தான் பார்த்திருக்கிறோம். இப்போது இருக்கும் இளைஞர்களிடம் பாசமலர் படத்தை காட்டினால் இந்த தில்லாலங்கடி கதையெல்லாம் உடாதீர்கள் என்று சொல்வார்கள். கடவுளே அந்த மாடல் ப்ரொடக்ஷனை நிறுத்திவிட்டார் என்று நினைத்தோம். இப்போது அதுவும் 2019 ல் ஒரு தங்கை அண்ணன் மரணத்தை கண்டதும் உயிரிழந்து இருக்கிறார். நெகிழ்ச்சியாக இருந்தது. பொதுவா தங்கச்சின்னா கல்யாணம் செய்துகொடுத்த பின் புடுங்கி தின்னும் உயிரை எடுக்கும் என்பதுதான் வழக்கம். இது அரிதிலும் அரிது. சகோதரன் இளமாறன், சகோதரி சாந்தி இருவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X