பொது செய்தி

தமிழ்நாடு

அனுபவ சான்று வழங்க இழுத்தடிப்பு : தினமலர் செய்தி எதிரொலி

Added : அக் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement


சென்னை, நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து, 'அரசு கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான அனுபவ சான்று வழங்காமல், முறைகேட்டில் ஈடுபடும் கல்லுாரிகள் மற்றும் தனியார் பல்கலைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.அரசு கல்லுாரி பேராசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, அனுபவ சான்றிதழ் தராமல், கல்லுாரிகளும், பல்கலைகளும் இழுத்தடிப்பதாகவும், வசூல் வேட்டை நடத்துவதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து, நம் நாளிதழில், அக்., 17ல் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கல்லுாரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேசன், அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் கல்லுாரி கல்வி இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், ௨,௩௩௧ உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியில் சேர விரும்புவோருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் நடத்தப்பட உள்ளது. இதற்கு, பட்டதாரிகளின் அனுபவ சான்றிதழ் தேவை. ஆனால், பணி நாடுபவர்கள் சான்றிதழுக்காக, தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளை அணுகும் போது, பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக புகார்கள் பெறப்படுகின்றன. பணி அனுபவ சான்றிதழ் தர மறுப்பது, காரணமின்றி தாமதம் செய்வது, உரிய படிவத்தில் சான்றிதழ் தர மறுப்பது, வருகை பதிவேடு நகல் மற்றும் ஊதிய பதிவேடு தர மறுப்பது, பணி அனுபவ சான்றுக்கு குறிப்பிட்ட தொகை கேட்பது என, பல்வேறு புகார்கள் வருகின்றன.

இது போன்ற புகார்களுக்கு ஆளாகும் கல்லுாரிகள், பல்கலைகளின் செயல், அரசு வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு எதிரானது. அரசின் ஒழுங்காற்று சட்ட விதிகளை மீறிய செயல். எனவே, பணிக்கு விண்ணப்பித்தவர்களின் நிலை கருதி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், எந்த வித புகாருக்கும் இடம் தராமல், பணி அனுபவ சான்றை விரைந்து வழங்க வேண்டும். கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் தங்களின் தவறான நிலைப்பாட்டை மாற்றாவிட்டால், அவற்றின் நிர்வாகம் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
23-அக்-201911:56:39 IST Report Abuse
.Dr.A.Joseph வேலை வாய்ப்பு பதிவு மூப்பினை கடை பிடிக்காவிட்டால் இவனுவ எல்லாம் நல்ல சம்பாதிச்சுருவானவ
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-அக்-201908:27:46 IST Report Abuse
Bhaskaran எதிர்க்கட்சி ஆளும்கட்சி செய்யவேண்டியப்பணியை தான் மட்டுமே செய்யும் நம் நாளிதழுக்கு ஓராயிரம் வணக்கம்
Rate this:
Share this comment
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
23-அக்-201911:03:40 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதிஎஸ்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X