அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஜூலை 4ல் காங்.,க்குஎச்சரிக்கை விடும் முஸ்லிம் மாநாடு:தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பேட்டி

Added : ஜூன் 22, 2010 | கருத்துகள் (6)
Advertisement

ராமநாதபுரம்:""முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத காங்கிரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில், ஜூலை 4ல் சென்னையில் முஸ்லிம்கள் மாநாடு நடைபெறும்,'' என, தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் ஜெய்னுலாபுதீன் கூறினார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 2004 தேர்தலில் காங்.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பிய முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தர ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்தும், அது குறித்து லோக்சபாவில் காங்.,விவாதம் செய்யவில்லை. சட்டம் இயற்றவில்லை. அறிக்கை தாக்கல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அனால் பிரதமரோ,""அனைத்து கட்சியின் ஒத்த கருத்து வந்த பின்தான் ஒதுக்கீடு செய்யப்படும்,'' என ,பல்டி அடித்துவிட்டார். இதன்காரணமாக முஸ்லிம்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.


இதன் வெளிப்பாடாகத்தான் ஜூலை 4 ம் தேதி, சென்னையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. தமிழகத்திலிருந்து 15 லட்சம் முஸ்லிம்கள் பங்கேற்கின்றனர். மாநாடு காங்கிரசுக்கு எச்சரிக்கை மாநாடாக இருப்பதோடு, வரும் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் காங்கிரசுக்கு எதிராக செயல்படுவது என முடிவு எடுக்கப்படும். அதே நேரத்தில் இடஒதுக்கீடு தர காங்., சம்மதித்தால் ஆதரவு தருவோம், என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூலை-201015:15:41 IST Report Abuse
அப்துல்லா (பெரியார்தாசன்) 10 சதவிகிதமா????? இருந்தாதானே கொடுக்குறதுக்கு. என்னா பாய்… இல்லாத ஒண்ண கேட்டுறதுக்கு மாநாடா? என்ன ரிசல்ட்? மாநாட்டுக்கு செய்த செலவு வேஸ்ட். அரசியல் தெரியாம ஆடாதிங்க பாய். உங்க மதம் சார்பாக உள்ள கட்சிகளுக்கு சப்போர்ட் பண்ணுற வழிய பாருங்க பாய். அத விட்டுட்டு புது புது கட்சி தொடங்கி கிட்டு… சின்னப்புள்ளதனமா இருக்கு ஜெய்னுலாபிதீன் பாய். நீங்க உங்க மதத்துல குழப்பம் ஏற்படுத்தாம இருந்தா அதுவே இஸ்லாமியர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடச்ச மாதிரி. நீங்க தல தூக்குனதுக்கு அப்புறம்தான் தமிழகத்துல முஸ்லீம் முஸ்லீம கொலை பண்ணுற கலச்சாரம் உருவாகி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
yousuf - Gudalur,இந்தியா
22-ஜூன்-201020:59:27 IST Report Abuse
 yousuf விமர்சனம் பண்ணாமல் லட்சியத்தை அடைய மாநாட்டுக்கு வந்து மாநாடு வெற்றிபெற வழி வகுப்போம்.
Rate this:
Share this comment
Cancel
மு.முகம்மது மஸ்தான் - VilliersLeBell,பிரான்ஸ்
22-ஜூன்-201015:46:35 IST Report Abuse
 மு.முகம்மது மஸ்தான் ஜைனுலாபிதீன் அவர்களே ,முதலில் நம்மவர்களை அரவணைத்து செல்லுங்கள் அப்புறம் பாருங்கள் அரசு படும் பாடை ,நமக்குள் இவ்வளவு பிரிவுகள்,முரண்பாடுகள் தேவையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X