பொது செய்தி

தமிழ்நாடு

ஜம்முவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். தேர்வு

Added : மே 13, 2011
Share
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முதன் முதலாக பெண் ஒருவர் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் பல்வேறு தாக்குதல்களால் இன்னல்களுக்கான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் , கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பின்னடவு ஏற்பட்டது . இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் முதன் முதலாக ஷா பைசால் என்ற மருத்துவ மாணவர் ஐ.ஏ.எஸ். தேர்வானார். இ‌வரே மாநிலத்தின் முதல் ஐ.ஏ.எஸ்.மாணவர். இதனையடுத்து இம்மாநிலத்தில் கடந்த 2010-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் லடாக் பகுதியைச் சேர்ர்ந்த ஒவேஷா இக்பால் என்ற பெண் ஐ.ஏ.எஸ்.ஆக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரைத்தொடர்ந்துமேலும் 5 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று்ள்ளனர். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து மாணவி ஓவிஷா இக்பால் கூறுகையில், மாநிலத்தின் முதல் ஐ.ஏ.ஏஸ்.ஆக தேர்வு பெற்ற ஷா பைசால் வெற்றி பெற்றது ஒரு தனி நபரின் சாதனை அதுவ‌ே எங்களுக்கு முன்மாதிரியாக இருந்தது என்றார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X