பொது செய்தி

இந்தியா

நான்கு மாநில முதல்வர்கள் ராஜினாமா

Added : மே 14, 2011
Share
Advertisement

புதுடில்லி: நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியாயின. இதில் 4 மாநில முதல்வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் தற்போதைய முதல்வர் தருண்கோகாய் மட்டும் மீண்டும் முதல்வராக உள்ளார்.


தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா என 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பலகட்டங்களாக கடந்த ஒரு மாதங்களாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று துவங்கியது. சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றாலும் ஐந்து மாநிலத்தின் மொத்த தொகுதிளை பார்லிமென்ட் தொகுதிக்கு இணையாக கணக்கிட்டு பார்க்கும் போது மொத்தம் 100க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிளை உள்ளடக்கியதாக காணப்பட்டது. இதன்மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தன்மான பிரச்னையாக கருதப்பட்டது. தமிழகத்தில் மோசமான தோல்வி, ஆந்திராவில் கடப்பா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வி என்று இருப்பினும் மேற்குவங்கத்தில் கூட்டணியின் மூலம் வெற்றி, கேரளாவில் மீண்டும் மாநிலத்தில் ஆட்சி என்ற அடிப்படையில் பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பித்தது. கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் அதிகம் பாதிப்புக்குள்‌ளாகியுள்ளது. கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் இடது சாரி கட்சிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளதேகாரணம். கேரளா, அசாமில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. புதுச்சேரியில் ஆட்சியை இழந்துள்ளது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் முழுமையாக தெரியவந்த நிலையில் மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகால இடது சாரிகளின் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.. அதே போன்று கேரளாவில் இடது சாரிகள் தோல்வியுற்றதை தொடர்ந்து முதல்வர் அச்சுதானந்தன், புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் வைத்திலிங்கம், தமிழகத்தில் தி.மு.க. தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் கருணாநிதி ஆகியோர் தங்களது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும்மீண்டும் காங்கிரஸ் வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. தற்போதைய முதல்வர் தருண்கோகாய் முதல்வராக வாய்ப்பு உள்ளதால் இவர் தொடர்நது முதல்வராக ஹாட்ரிக் அடித்துள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X