அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்? அமைச்சரவையில் ஆலோசனை

Updated : நவ 19, 2019 | Added : நவ 19, 2019 | கருத்துகள் (4+ 15)
Advertisement
மேயர் பதவி, மறைமுக தேர்தல்?, அமைச்சரவை, ஆலோசனை

சென்னை: மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை, மறைமுக தேர்தல் வழியாக நிரப்புவது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம், ஏற்பாடுகள் செய்து வருகிறது. ஆனால், ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வும், உள்ளாட்சி தேர்தலை விரும்பவில்லை.

நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசின் நெருக்கடி காரணமாக, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலைக்கு, அ.தி.மு.க., அரசு தள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டப்படி, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை, வாக்காளர்கள் ஓட்டளித்து, நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்.

எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், தங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை ஒதுக்கும்படி வலியுறுத்தி வருகின்றன. இதையும், அ.தி.மு.க., தலைமை விரும்பவில்லை. அதே நிலை தான், தி.மு.க., கூட்டணியிலும் நிலவுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு, மேயர், நகராட்சி தலைவர் பதவிகளை, தாரை வார்த்து கொடுத்தால், கட்சியினரை சமாளிக்க முடியாது.

மேலும், தலைவர் பதவிகளை கொடுப்பது, அக்கட்சிகளை வளர்த்து விடுவதற்கு வழிவகுக்கும்.
இதை தவிர்க்க, மேயர் மற்றும் தலைவர் பதவிகளை, வார்டு உறுப்பினர்களே தேர்வு செய்யும், மறைமுக தேர்தலை அமல்படுத்த, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு செய்வதற்காக, தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.

முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம், முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த நிதி ஒதுக்குவது; மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சென்னை அண்ணா பல்கலையை, மேம்படுத்தப்பட்ட சீர்மிகு பல்கலையாக, மத்திய அரசு உதவியுடன் தரம் உயர்த்த அனுமதி அளிப்பது; ஐந்து புதிய நிறுவனங்கள் தொழில் துவங்க அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அதிகாரப்பூர்வமாக, எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடத்த, முடிவு செய்தால், அவசர சட்டம் கொண்டு வரப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4+ 15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeans bala - CHENNAI,இந்தியா
20-நவ-201915:24:17 IST Report Abuse
jeans bala சிஸ்டம் அப்டேட் செய்தால் தான் ஆட்சி சிறப்பாக இருக்கும் 2 .ஓ ஜிகாபைட்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
20-நவ-201908:55:06 IST Report Abuse
ஆரூர் ரங் இரண்டு வகைகளுக்கும் என்ன வேறுபாடு? நேரடித்தேர்தல் என்றால் வாக்காளர்களுக்கு பணம் நேரடியாகப்போகும் . மறைமுகத்தேர்தல் என்றால் தேர்தலுக்குப்பின் கவுன்சிலர்களுக்கு மேயர் வேட்பாளர்கள் கறுப்பில் வாரிவழங்கி விலை பேசுவர் கட்சிமாறல் தடை சட்டம் உள்ளாட்சிகளுக்கு பொருந்ததாமே ?
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
20-நவ-201906:37:41 IST Report Abuse
Samy Chinnathambi பா.ம.கவும் தேமுதிகவும் ரொம்பவும் அதிகமாக எதிர்பார்க்கின்றன...இது தேவையில்லாதது.....இப்போதுள்ள சூழ்நிலையில் இவர்கள் அதிமுகவுடன் ஒட்டி கொள்வதே இவர்களுக்கு நல்லது...........நகராட்சி தலைவர்கள் பதவியை மட்டும் கேட்டு வாங்கி கொள்வது இவர்களுக்கு நல்லது......... மேயர் சீட்டு கேட்பது ரொம்ப அதிகம்................
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
20-நவ-201920:57:21 IST Report Abuse
தமிழ்வேள்குருமாவின் ஆட்களை சமாளிக்க ராமதாஸ் தனியரசு கோஷ்டிகளால் மட்டுமே முடியும் ..அவர்களை கண்டால் திருமா கோஷ்டிக்கு பயம் கூட ......இவர்கள் தமிழகத்து கோத்தபாய ஆட்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X