அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோல்விக்கு காரணம் "சகவாசம்': இளங்கோவன் குமுறல்

Updated : மே 18, 2011 | Added : மே 16, 2011 | கருத்துகள் (31)
Share
Advertisement
மதுரை: ""சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு முக்கிய காரணம் சகவாச தோஷம்,'' என, காங்., முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குமுறினார். மதுரையில் அவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டி: முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில்,

மதுரை: ""சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு முக்கிய காரணம் சகவாச தோஷம்,'' என, காங்., முன்னாள் மாநில தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குமுறினார். மதுரையில் அவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டி: முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும், எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்கவுள்ள விஜயகாந்த்துக்கும் வாழ்த்துக்கள். தேர்தலில் மக்கள் பணத்திற்கு சோரம் போய் விடுவரோ என பயந்த நேரத்தில், தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழகம் பெருமை பெற சிறப்பாக பணியாற்றினர். நடக்க இருந்த தவறுகளையும், தில்லுமுல்லுகளையும் தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடையில்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்னைகள் இருக்காது. தொழில் வளம் பெறும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.

தேர்தலில் 63 நாயன்மார்களாக காங்., வேட்பாளர்கள் போட்டியினர். தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்., தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்நிலை ஏற்படும் என தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்கபாலு பதவி விலக மேலிடம் உத்தரவிட்டது. காங்.,க்கு புதிய தலைவரை சோனியா விரைவில் அறிவிப்பார். சட்டசபை தேர்தலில் காங்., தோல்விக்கு "சகவாச தோஷம்' தான் முக்கிய காரணம். மக்கள் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்தனர். சோனியா யாரை தலைவராக அறிவித்தாலும், அதை ஏற்று காங்கிரசை வளப்படுத்த தொண்டர்கள், தலைவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட பாடுபடுவேன். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - India,சிங்கப்பூர்
17-மே-201108:03:22 IST Report Abuse
Krish 63 நாயன்மார்களாக காங்., வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது பஞ்ச பூஜ்யமாக அவதாரம் எடுத்து குழம்பி நிக்கிறார்கள். என்ன திடீர் ஞான உதயம்? தேர்தலில் விழுந்த இடியா இல்ல சோனியா குடுத்த அடியா?
Rate this:
Cancel
Chandran - Tamil Nadu,இந்தியா
17-மே-201107:09:49 IST Report Abuse
Chandran இங்கு சில பேர் கருத்து கூறியதைப்போல அல்லாமல் இலங்கைப் பிரச்சினை என்பது தமிழக தேர்தல்களில் என்றுமே எதிரொலித்ததில்லை என்பது என் கருத்து. அதில் என்றும் மாற்றமில்லை ( இது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணி என்றால், வைகோ, பழ.நெ, திருமா போன்றோர் என்றோ அதிகாரத்தில் கோலோச்சுபவர்களாக ஆகியிருப்பர் ) ... அதே நேரத்தில் (புலி / சிங்கம் தவிர்த்த) அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கை சரியான வாழ்வாதாரத்தினை செய்ய தமிழகமும், இந்தியாவும் நெருக்க வேண்டும். இதை ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும். செய்திக்கு வருவோம்... இளங்கோவன் அவர்களே... காங் தோல்விக்கு சகவாசம் மட்டும் காரணமல்ல.... இந்தியாவில் நடை பெற்ற முப்பெரும் ஊழல் (ஆதர்ஷ், காமன்வெல்த் & 2G ) போன்றவற்றில் காங்கிரசுக்கு சம்பந்தமில்லை என்பதை காங் நிரூபிக்க தவறியுள்ளது.. குறிப்பாக தமிழகத்தில் குடும்ப ஆட்சி அராஜகம், பல துறைகளில் ஊழல்கள் மற்றும் குடும்ப தலையீடுகள் போன்றவற்றை கிஞ்சித்தும் தட்டிக்கேட்காதது, அலைக்கற்றை ஊழலில் திமுக மாட்டிய பின்பும் அதை உதறித்தள்ளாமல் அதனுடனே பேரம் பேசி கூட்டணி அமைத்தது இவை எல்லாம் ஊழலில் காங்கிரசின் பாராமுகத்தையே காட்டியது மட்டுமல்லாமல், அதில் தனக்கு பங்கு இல்லை என்பதை நிரூபிக்க காங் எந்த முயற்ச்சியும் எள்முனை அளவு கூட செய்யவில்லை என்பது... எல்லாம் தான் படுதோல்விக்கு காரணம்.. திமுக பெயர் நாற ஆரம்பித்த உடனேயே அதை உதறித்தள்ளி இருந்தால் மக்களுக்கு கொஞ்சமாவது நம்ப இடம் இருந்திருக்கும். ராசா முதல் திமுகவினர் அனைவரும், எல்லாம் பிரதமருக்கு தெரிந்துதான் நடந்தது என்று கூறிய பின்பும் அதை ஆமோதிப்பது போல அமைதியாக இருந்ததும் அதிக சந்தேகத்திற்கு இடமளிக்கிறது... எனவே காங்கிரஸ், தெரிந்தே இருந்தும் திமுகவை உதறமுடியாமல், அதன் பரிசுத்தத்தினை நிரூபிக்காததால் தோற்றது... சகவாசம் எல்லாம் திமுகவை பின்வரும் நாள்களில் உதறித்தள்ள உபகயோகமான வாக்கியமாக இருக்குமே ஒழிய தமிழக மக்கள் அது உண்மையல்ல என தெரிந்துதான் தோற்க்கடித்துள்ளனர்.
Rate this:
Cancel
srini - chennai,இந்தியா
17-மே-201106:44:58 IST Report Abuse
srini சத்தியமுர்த்தி பவனை நகைச்சுவை பவன் என பெயர் மாற்றலாம்.அப்பப்பா எத்தனை கோஷ்டிகலடா, அதில் கிழிந்தது எத்தனை வேஷ்டிகலடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X