கிறிஸ்துவ மிஷனரிகள் கண்காணிப்பு: ஐகோர்ட் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்துவ மிஷனரிகள் கண்காணிப்பு: ஐகோர்ட் நோட்டீஸ்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019 | கருத்துகள் (93)
கிறிஸ்துவ மிஷனரிகள், கண்காணிப்பு, வாரியம், ஐகோர்ட் நோட்டீஸ்,

இந்த செய்தியை கேட்க

மதுரை: கிறிஸ்துவ மிஷனரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க, தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில், கிறிஸ்துவ அமைப்புகள் ஈடுபடுகின்றன. இதற்கு பல யுக்திகளை கையாள்கின்றனர்.சில தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, சில சமூக விரோத சக்திகள் போராடின. வெளிநாட்டு நிதியுதவிஇதனால், அம்மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது.




இதற்கு, வெளிநாட்டு நிதியுதவி பெறும் சில கிறிஸ்துவ அமைப்புகள் உதவின. இது, மத்திய, மாநில அரசுகள் மற்றும் கட்சிகளுக்கு தெரிந்தும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி பாதிக்கும் எனக் கருதி, அமைதி காக்கின்றன.துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டத்தை, சில கிறிஸ்துவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் துாண்டின. துப்பாக்கிச் சூட்டில், 13 அப்பாவிகள் பலியாகினர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், உதவிகள் செய்வது போல், கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சில கிறிஸ்துவ அமைப்புகள், சமூகவிரோத சக்திகள், அரசுக்கு எதிராக மக்களை துாண்டின. கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒட்டு மொத்த அரசு நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது. அங்கு, கிறிஸ்துவ பிஷப்களின் கைகளில் அதிகாரம் குவித்துள்ளது. அங்கு எந்த ஒரு கிராமத்திலும், பிஷப்பின் அனுமதியின்றி, அரசு அலுவலர்கள் நுழைய முடியாது.தமிழகத்தில், ஹிந்து கோவில்கள் மற்றும் அவற்றின் சொத்துகளை நிர்வகிக்க, அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சொத்துகள் தணிக்கை செய்யப்படுகின்றன. வக்பு சொத்துகளை பாதுகாக்க, நிர்வகிக்க, வக்பு வாரியம் ஏற்படுத்தப்பட்டு, மாவட்டந்தோறும் அதன் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தணிக்கை இல்லைகிறிஸ்துவ மிஷனரிகள், சர்ச்சுகளுக்கு சொந்தமான சொத்துகள், மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் வருவதில்லை. அரசால் தணிக்கை செய்யப்படுவதில்லை. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில், கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதி உதவி பெறுகின்றனர். சரியான நோக்கத்திற்கு நிதியை பயன்படுத்துவதில்லை. இதை, அரசு முறையாக கண்காணிப்பதில்லை.

கிறிஸ்துவ மிஷனரிகளின் நடவடிக்கையை கண்காணிக்க, தனி வாரியம் அமைக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, மத்திய உள்துறை, சட்டத் துறை செயலர்கள், தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, நான்கு வாரங்கள் ஒத்தி வைத்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X