மும்பை : நிழல்உலக தாதா தாவூத் இப்ரஹிம், சகோதரர் மீது மும்பையில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக தாவூத் சகோதரர் இக்பால் கஸ்தார் காயம் இன்றி தப்பித்தார். ஆனால் அவரது கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் தப்பி ஒடினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சோட்டா ராஜன் சதி ? : இதற்கிடையில் தாவூத் சகோதரரை கொலை தங்களை ஏவியது சோட்டா ராஜன் என கைது செய்யப்பட்ட சையத் பிலால், இந்திரா காத்ரி ஆகிய 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் இருவர் மீதும் இ.பி.கே., 302 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் இன்று மாசகான் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்.