பொது செய்தி

இந்தியா

இளம்பெண்களுக்கு சொத்தில் பங்கு :சுப்ரீம் கோர்ட்

Added : மே 19, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி:திருமணமாகாத இளம்பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து சமூக சட்டத்தின் படி ஆண்வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துக்களை நிர்வகிப்பதற்கு உரிமை உண்டு என்ற பழக்கம் கடைபிடித்து வருகின்றது. தமிழ்நாடு உட்பட ஒரு சில மாநிலங்களில் மட்டும் திருமணமான பெண்களுக்கும் மூதாதையாரின் சொத்துக்களில் பங்கு உண்டு என்று சட்டம் இயற்றியுள்ளது. இருப்பினும் பெரும்பாலான மாநிலங்களில் பெண்களுக்கு சொத்துரிமை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கு ஒன்றில் ஆஜரான நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் மணமாகாத இந்து சமூக பெண்களுக்கும் வாரிசுரிமை சட்டப்படி தங்களது மூதாதையர் சொத்துக்களில் பங்கு கேட்க உரிமை உள்ளது என்று அவர்கள் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்கச் செய்வதில் அவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தின் மூலம் அதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamizh Mozhi - Trichy,இந்தியா
19-மே-201110:14:45 IST Report Abuse
Thamizh Mozhi ஏனிந்த தாமதம். இப்பொழுதாவது நியாயம் கிடைத்துள்ளதே மகிழ்ச்சி. நம் பாரதி உயிருடன் இருந்திருந்தால் சென்ற நூற்றாண்டிலையே இந்தியா முழுவதும் பெண் சொத்துரிமை அமலாக்க பட்டிருக்கும். கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திட லாமோ? என்று முழங்கியவரின் கேள்விக்கு பதில் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X