தமிழ்நாடு

ரஜினி உடல்நிலை: மருத்துவமனை விளக்கம்

Added : மே 20, 2011 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: ""நடிகர் ரஜினிகாந்திற்கு நெஞ்சில் இருந்த நீர்கோர்ப்பை அகற்ற, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் திருப்திகரமாக உள்ளது. அடுத்த இரு தினங்களில் அவர் தனி வார்டுக்கு திரும்புவார்,'' என்று ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ரஜினியின் மார்பில் அளவிற்கு அதிகமாக நீர்கோர்ப்பு இருந்தது. அதை அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் ஆகிய நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் உடல்நலம் திருப்திகரமாக உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்த இரண்டு நாட்களில் தனி வார்டுக்கு திரும்புவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandkumar.v - villupuram,இந்தியா
20-மே-201109:39:51 IST Report Abuse
anandkumar.v ரஜினிகாந்தின் உடல்நிலை சரியாக எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்தனை செய்கின்றேன்
Rate this:
Share this comment
Cancel
prakash - panruti,இந்தியா
20-மே-201109:22:46 IST Report Abuse
prakash நல்லவங்கள் கடவுள் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான் ,,,,,,get well soon தலைவா
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
20-மே-201106:00:04 IST Report Abuse
K.Sugavanam விரைவாக நலமடைய இறை அருள் துணை புரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X