சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்ணீர், மவுனம், கனிமொழி : ‌கோர்ட் சீன்

Added : மே 21, 2011 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி : நேற்று ( 21ம் தேதி) பிற்பகல் டில்லி பட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக காத்திருந்த கனிமொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். கோர்ட்டில் 2ஜி வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா, சாகித் பால்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா ஆகியோரும் இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஓ.பி.செய்னி வாசிக்க ஆரம்பித்தார். யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். கனிமொழி ஜாமீன் மனு ரத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொண்ட ராஜா, எழுந்து நின்றார். சமிக்ஞைகளில் கனி கைது என்பதை தெரிவித்தார். அதிர்ந்து போனார் கனிமொழி. சென்னையில் இருந்து வந்திருந்த கனிமொழியின் உறவுக்கார பாட்டி, கனிமொழியின் மெய்க்காப்பாளர் ஆகியோர் அழுது கொண்டே கோர்ட்டில் இருந்து வெளியேறினர். மவுனம் மட்டுமே மொழியாக, கண்களில் இருந்து கண்ணீர் வழிய கணவர் அரவிந்தனை நோக்கி நகர்ந்தார் கனிமொழி. கணவரை கண்ணீருடன் ஆரத் தழுவி மவுனத்தடன் நகர்ந்தார். கோர்ட்டில் இருந்த டி.பி.ரியால்டி நிறுவனர் சாகித் பால்வாவின் தந்தை, கனிமொழியை நோக்கி நடந்து வந்து, கனியின் தலையில் கைவைத்து எதுவும் நடக்காது என ஆசிர்வதிப்போல் செய்து விட்டுச் சென்றார். உடைகளுக்கு ஏற்ப விதவிதமாக, வித்தியாசமாக கைப்பைகளை ‌பயன்படுத்தும் கனிமொழி, அவர் கையில் வைத்திருந்த பையை கணவரிடம் தந்து விட்டு நகர்ந்தார். யாருடனும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் கோர்ட்டில் இருந்த போலீசார் கனிமொழியை சுற்றிலும் பாதுகாப்புக்கு வந்தனர். வெளியில் இருந்து உள்ளே நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி, கனிமொழியையும், சரத்குமாரையும் கோர்ட் வளாகத்தில் இருக்கும் லாக் அப்புக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
zahirhussain - thanjavur (abudhabi),இந்தியா
21-மே-201115:00:55 IST Report Abuse
zahirhussain ''please keep the digaar jail only for politician''
Rate this:
Share this comment
Cancel
lingesan jpl - Nellai,இந்தியா
21-மே-201114:04:43 IST Report Abuse
lingesan jpl ஆடிய ஆட்டம் என்ன..? வாழ்த்துக்கள்... திருசெந்தூரில் உன் பிறந்த நாளுக்கு கரை படியாத பெரும் தலைவர் காமராஜர் படத்தையும் ஊழல் ராணி உன் படத்தையும் போட்டு நாடார் சங்கங்களின் சார்பாக அடித்தது போல் நியே உன்னை விளம்பர படுத்தினாய் .. அந்த மாபெரும் தலைவர் காமராஜ் பெயரை சொல்ல கூட உனக்கு அருகதை இல்லை... இதனால் மனம் நொந்து போன என்னை போன்ற வர்களின் சாபம் உன்னை விடாது........
Rate this:
Share this comment
Cancel
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
21-மே-201113:24:25 IST Report Abuse
parasuraman sharma தீர்‌ப்பு இந்தியில் இருந்தது. யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். ---- கனிக்கு ஹிந்தி தெரியாதா என்ன? அவரு ஹிந்தி பண்டிட்டாக்கும்-னு கருத்துப் பகுதியில எத்தனையோ பேர் எழுதியிருந்தாங்களே???? ஒ, புரியுது அப்பால, ஹிந்தி தெரியாதுன்னு சொல்லி தமிழ்ல கேக்கணுமே!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X