திருச்சி : சென்னைக்கு இனோவா காரில் சென்றபோது இந்த பரிதாபம் நடைபெற்றது. பாடலூர் பிரிவு அருகே, முன்னாள் சென்ற டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கியது குறித்து பின்னால் சென்ற அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் சிவபதி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இவரும் இந்தே வழியே சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
அமைச்சர் மரியம்பிச்சை சென்றுகொண்டிருந்த காரில் 6 பேர் இருந்துள்ளனர். திருச்சியில் இருந்து கிளம்பி காலை 7 மணிக்கு பெரம்பலூர் (இங்கிருந்து 15 .கி.மீட்டர் தொலைவில் ) திருநாயக்குறிச்சி பிரிவு ரோட்டில் பாடலூர் அருகே எஸ்கார்டு சென்ற கார் முன்னே வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்நேரத்தில் இந்த வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் லாரிமீது மோதியது. இதில் அமைச்சர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அருகில் இருந்த டிரைவர் ஆனந்த், உதவியாளர் ஒருவர் லேசான காயமுற்றனர். விபத்திற்கு காரணமான் லாரி தப்பி ஓடி விட்டது. லாரி குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை.
விபத்தில் பலியான பி.ஏ., (வரலாறு) பட்டதாரியான அமைச்சர் மரியம் பிச்சை, திருச்சி மேற்கு தொகுதியிலி்ல் முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர். திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த மரியம் பிச்சைக்கு ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த இவர் திரையரங்கும் நடத்தி வந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE