கடந்த 16ம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சராக மரியம் பிச்சை பதவியேற்றார். இவர் 27.04.1951ம் ஆண்டு திருச்சி, சங்கிலியாண்டபுரம் பகுதியில் பிறந்தார். இளங்கலை வரலாறு பட்டம் பெற்ற இவருக்கு வயது 60. மரியம் பிச்சைக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிக் மீரா, ராஜ் முகமது, அமீர் முகமது என்ற மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
ஆரம்பத்தில் திரைப்பட வினியோகஸ்தராகவும், அரசுக்கு சொந்தமான கலைவாணர் அரங்கை குத்தகைக்கு எடுத்து, மரியம் தியேட்டர் என்ற பெயரிலும் நடத்தி வந்தார். 1988ம் ஆண்டு சங்கிலியாண்டபுரம் 27வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் வாழ்க்கையை துவக்கினார்.மரியம் பிச்சை, திருச்சி மாநகர அ.தி.மு.க., அமைப்பு செயலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட வாய்ப்பு கிடைத்ததால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலிலேயே முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனாலேயே மரியம் பிச்சைக்கு, சுற்றுச்சூழல் அமைச்சராக முதல்வர் ஜெயலலிதா, பதவி அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE