தேக்கடி படகு விபத்து பகுதியில் நீரில் மூழ்கி குழுவினர் ஆய்வு

Added : மே 25, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேக்கடி படகு விபத்து பகுதியில் நீரில் மூழ்கி குழுவினர் ஆய்வு

கூடலூர்: தேக்கடி படகு விபத்து நடந்த இடத்தில், நீரில் மூழ்கி விசாரணைக் குழுவினர், நேற்று ஆய்வு நடத்தினர். தேக்கடியில் 2009 செப்., 30ல் வனத்துறைக்குச் சொந்தமான ஜலகன்னிகா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 45 பேர் பலியாகினர். விபத்துக்கான காரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி மைதீன் குஞ்சு தலைமையிலான குழு, 2010 டிசம்பரில் விசாரணையை துவக்கியது. படகு டிரைவர், கிளீனர், சுற்றுலாப் பயணிகளிடம் இதுவரை 18 முறை விசாரணை நடந்துள்ளது.


மீண்டும் விசாரணை: நேற்று 19வது முறையாக ஆய்வுக் குழுவினர் தேக்கடியில் விசாரணை நடத்தினர். படகின் வடிவமைப்பு குறித்து ஆய்வு நடந்தது. விபத்து நடந்த இடத்தில், தண்ணீருக்கு அடியில் வளர்ந்துள்ள மரங்கள் மீது படகு மோதியதில் விபத்து நடந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. குழுவில் இருந்த கடற்படை வீரர்கள், நீரில் மூழ்கி மரங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

அவகாசம்: விசாரணைக்கு மேலும் 2 மாதம் அவகாசம் தேவைப்படும் என ஆய்வுக்குழு, உயர்மட்ட ஆய்வுக் குழுவினருக்கு தகவல் தந்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
forgio - nagercoil,இந்தியா
26-மே-201109:25:25 IST Report Abuse
forgio it's prone to indian law. it's going to complete two years still they didn't investigation not completed yet. like this in india more than 25 thousand of cases in pending. i request to law and order department, that to do investigation as fast and judgment too. if it takes more time to investigation and judgement, it indirectly encourage to rise criminals.
Rate this:
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
26-மே-201104:53:04 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN என்ன விசாரணை செய்து, என்ன ஆக போகிறது? போன உயிர்கள், போனது தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X