கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுவர்களை கடத்தி பாலியல் சித்ரவதை: வெளிநாட்டு ஆசாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல்

Added : மே 27, 2011
Advertisement

சென்னை : சிறுவர்களை கடத்தி தகாத முறையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நெதர்லாந்து ஆசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் தெருவில் விளையாடும் சிறுவர்களுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் சிறுவர்களுடன் தகாத உறவு கொள்ளும் வீடியோக்கள், இன்டர்நெட்டில் பரவுவதாக சென்னை சைபர் கிரைம் போலீசுக்கு சர்வதேச இன்டர்போல் போலீசார் புகார் கொடுத்தனர்.


சென்னை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, 2009ம் ஆண்டு ஜூலையில் இ-மெயிலில் இந்த புகார் வந்தது. சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட வலைதளத்தை ஆய்வு செய்தனர். அதில், சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் இணைப்பிலிருந்து வீடியோக்கள் நெட்டில் ஏற்றப்பட்டது தெரிந்தது. பின், போலீசாரின் விசாரணையில், சூளைமேடு பொன்னுசாமி வைத்தியர் தெருவில் வசிக்கும் நபர், ஸ்டாலின் என்ற பெயரில் நெட் இணைப்பு பெற்று வீடியோ வெளியிடுவது தெரிந்தது. அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், வில்லியம்(56) என்ற நெதர்லாந்து ஆசாமி கைது செய்யப்பட்டார். அவர், தான் வசித்த பகுதியில், தெருவில் விளையாடிய நான்கு சிறுவர்களுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, இயற்கைக்கு மாறான பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிந்து இன்டர்நெட்டில் வெளியிட்டதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இவ்வழக்கு, சென்னை நான்காவது விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி அன்பழகன் அளித்த தீர்ப்பில், எட்டு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகளும், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவில் 10 ஆண்டுகளும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவை அனைத்தையும் 10 ஆண்டுகளாக ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், எட்டு பிரிவுகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 40 ஆயிரம் ரூபாயும், தகவல் தொழில்நுட்ப குற்றப்பிரிவில் 10 ஆயிரம் ரூபாயும் என, மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என உத்தரவிடப்பட்டது. சிறுவர்களிடையே தகாதமுறையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு ஆசாமிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X