அரசியல் செய்தி

தமிழ்நாடு

கையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்? ஜெ., கூறிய ருசிகர கதை

Added : மே 27, 2011 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை: சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுபவரை, சபை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையைப் பிடித்து, அழைத்து வந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர வைக்கும் சம்பிரதாயம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த ருசிகர தகவல் வருமாறு: லோக்சபாவானாலும், சட்டசபை ஆனாலும், சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுபவரை, சபை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கரம் பிடித்து அழைத்துச் சென்று,
கையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்? ஜெ., கூறிய ருசிகர கதை

சென்னை: சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுபவரை, சபை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையைப் பிடித்து, அழைத்து வந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர வைக்கும் சம்பிரதாயம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த ருசிகர தகவல் வருமாறு: லோக்சபாவானாலும், சட்டசபை ஆனாலும், சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுபவரை, சபை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கரம் பிடித்து அழைத்துச் சென்று, ஆசனத்தில் அமர வைப்பது வழக்கம். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால், அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த மரபுக்கு பின்னால், ஒரு பெரிய வரலாறே உள்ளது. இந்திய ஜனநாயகம் என்பது, பிரிட்டிஷ் ஜனநாயகத்தை பின்பற்றியே அமைக்கப்பட்டது. இங்கிலாந்து பார்லிமென்ட் மாதிரியே, இந்திய பார்லிமென்டும், சட்டசபையும் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில், சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார்; பார்லிமென்டும் இருக்கும். இங்கே இந்தியாவில் அந்த முறையை பின்பற்றியபோது, மன்னர் இல்லை; ஜனாதிபதி இருக்கிறார்.


இங்கிலாந்தில், மன்னர் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய விரும்புவார். அதற்கு பார்லிமென்டின் அனுமதி வேண்டும். பெரும்பாலும், பார்லிமென்ட் உறுப்பினர்கள், மன்னரது விருப்பத்தை நிராகரித்து விடுவர். இச்செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் சபாநாயகர். பார்லிமென்ட் தலைவர் என்று பெயர் வைக்காமல், "ஸ்பீக்கர்' என்று பெயர் வைத்தனர். பார்லிமென்டின் கருத்தை மன்னரிடம் எடுத்து உரைப்பவர் தான், "ஸ்பீக்கர்!' எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம், மன்னருக்கு உண்டு. ஆகவே, மன்னர் விரும்பியது நடக்காது என, "ஸ்பீக்கர்' எடுத்துரைக்கும் போது, உடனே மன்னர், அவருக்கு மரண தண்டனை விதிக்க, தலையை வெட்டி எடுக்க, ஆணையிடுவார்.


இது பலமுறை நடந்ததால், யாருமே, "ஸ்பீக்கர்' பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே, புதிய பார்லிமென்ட் அமைந்ததும், இன்னார் தான், "ஸ்பீக்கர்' என்று அறிவித்ததும், அவர் உடனே, தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார். அப்போது, அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும், அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி, அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து, ஆசனத்தில் அமர வைப்பர். இது தான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு. இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு, "ஸ்பீக்கர்' ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. "ஸ்பீக்கரின்' தலையை எடுங்கள் என்று சொல்லக் கூடிய மன்னரும் இங்கு இல்லை. ஆனாலும், அவரது கரங்களை பிடித்து ஆசனத்தில் அமர வைக்கும் மரபு மட்டும் அப்படியே இருக்கிறது. சபாநாயகர், "தப்பித்தால் போதும்' என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை, நாங்கள் எந்த நாளிலும் உருவாக்க மாட்டோம் என, ஆளுங்கட்சி சார்பில் உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrakanth - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-மே-201116:01:13 IST Report Abuse
chandrakanth Great! Our CM has very good sense of humor also. It is good to see her smiling more often these days. Has she really changed or just a show off? Whatsoever, we love to see her just like this always. Keep it up Miss.CM
Rate this:
Cancel
maniccavelou - paris ,பிரான்ஸ்
28-மே-201115:49:02 IST Report Abuse
maniccavelou தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு இறைவன் சகல வல்லமைகளும் தந்தருள வேண்டுகிறோம். தமிழ் மக்களின் ஈடு இணையற்ற தலைவர் அவர் ஒருவரே! தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமும் அவர் ஒருவரே!! வாழ்க வாழ்க! பல்லாண்டு வாழ்கவே!!!
Rate this:
Cancel
s.s.srinivasan - Bangalore,இந்தியா
28-மே-201115:07:57 IST Report Abuse
s.s.srinivasan பார்லிமென்ட்தான் அரசர் /ராணி அவர்களின் விருப்பத்தை நிராகரிக்கிறது .ஆனால் அந்த தீர்மானத்தை எடுத்து சொல்ல ஸ்பீக்கரை அனுப்பினார்கள் . அதனால் கோபமடைந்து 1394 முதல் 1535 வரை 7 ஸ்பீக்கர்கள் இங்கிலாந்து மன்னரால் சிரச்சேதம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் எண்பது வரலாற்று உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X