பொது செய்தி

இந்தியா

ஏமனில் இருந்து இந்தியர்கள் திரும்ப அரசு அறிவுறுத்தல்

Added : மே 28, 2011
Share
Advertisement

புதுடில்லி:ஏமனில், கடந்த வார இறுதியில், வளைகுடா கூட்டுறவு கவுன்சில் பரிந்துரைத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலே மறுத்ததை அடுத்து, உள்நாட்டுக் கலவரம் மூண்டது."ஹஷித்' என்ற பழங்குடியினத் தலைவர் ஷேக் சதக் அல் அமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிபருக்கு எதிராகக் களத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் சனா மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள மக்கள், பாதுகாப்பான இடம் தேடி வெளியேறி வருகின்றனர்.இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஏமனில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, அங்குள்ள இந்தியர்கள் ஏதாவது ஒரு வகையில், அந்நாட்டில் இருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.ஏமனுக்கான இந்தியத் தூதரகமும், தூதரும் அங்கு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். உதவி தேவைப்படுவோர் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X