சிலிண்டர் விலை உயர்வு: ஸ்மிருதி போட்டோவுடன் ராகுல் கிண்டல்

Updated : பிப் 13, 2020 | Added : பிப் 13, 2020 | கருத்துகள் (38)
Advertisement
Congress,Rahul,RahulGandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல்காந்தி

புதுடில்லி: வீட்டு காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்துள்ள காங்., எம்.பி., ராகுல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பழைய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு கிண்டலடித்துள்ளார்.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நேற்று(பிப்.,12) அதிரடியாக ரூ.144 உயர்த்தி அறிவித்தன. விலை உயர்வை கண்டித்து காங்., தேசியவாத காங் உள்ளிட்ட கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், காங்., கட்சி தலைவர் ராகுல், வீட்டு கேஸ் விலை உயர்வை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.

அப்புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளதாவது: வீட்டு காஸ் சிலிண்டர் விலை அதிக அளவில், ரூ.150 உயர்ந்துள்ளதற்காக, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களது போராட்டத்தை நான் ஏற்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ராகுல் பதிவிட்ட ஸ்மிருதியின் புகைப்படம், காங்., ஆட்சியின் போது, காஸ் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., சார்பில் அவர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
17-பிப்-202005:35:42 IST Report Abuse
Ray மானியமில்லாத சிலிண்டர் விலை ஒரேடியாக ரூ 150 ஏத்தினது சரிதான்னு இங்கே பலரும் ஒத்து ஊதறாங்க டி காபி ஓட்டல் பேக்கரி விலையேற்றம் ஆகும்
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-பிப்-202023:08:23 IST Report Abuse
Rafi காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலை உயர்வு ஆகியிருக்கு. மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்க என்றெல்லாம் சிந்திக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-பிப்-202011:09:02 IST Report Abuse
Malick Raja உண்மைதானே
Rate this:
Share this comment
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
16-பிப்-202018:26:27 IST Report Abuse
Davamani Arumuga GounderMalick Raja - jeddah,சவுதி அரேபியா எண்ணை நிறுவனங்கள் கேஸ் விலையை ஏற்றிய அளவிற்கு மானியமும் ஏறிவிட்டது.. ஆக..ஆக.. மானியம் பயனாளியின் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதால், பயனாளிக்கு கேஸ் விலை அதே பழைய விலைதான்.. ஆனால் ஒன்று.. முதலில் பணம் கொடுத்து வாங்க வேண்டும்.. ஓரிரு நாளில் நம் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.. ஆனால்.. காங்கிரஸ் ஆட்சியில் மானியம் நேரடியாக எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால்.. நிறுவனத்தினர் என்ன விலை கூறுகிறார்களோ அதுதான் பயனாளர்களுக்கான விலை.. மானியம் எவ்வளவு என்று அப்போ நமக்கு தெரியாது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X