ஹெட்லிக்கு வாழ்த்துச் சொல்லவில்லை : ராணா வக்கீல் வாதம்

Updated : மே 28, 2011 | Added : மே 28, 2011
Share
Advertisement

சிகாகோ : மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஹெட்லி மற்றும் ராணா வழக்கு சிகாகோ கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஹெட்லி அளித்த வாக்குமூலத்தில் மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு ராணா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக கூறியிருந்தார். ஆனால் இதனை ராணாவின் வக்கீல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ராணா சார்பில் ஆஜரான வக்கீல் கோர்ட்டில் கூறுகையில் : மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஹெட்லியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது சகோதரரும், மனைவியும் தான் வாழ்த்து‌ தெரிவித்தனர் என்றும் ராணா வாழ்த்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X