பொது செய்தி

தமிழ்நாடு

சிட்டுகளின் தாகம் தீர்க்கும், 'பறவை' மனிதர்

Updated : மார் 06, 2020 | Added : மார் 06, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
bird,  சிட்டு, தாகம், பறவைமனிதர்

பரபரப்பான இந்த உலகில், தன்னை சுற்றி இருப்பவர்களையே மறந்து வாழும் மனிதர்களுக்கு மத்தியில், பறவைகளுக்கு என, தன் நேரத்தை ஒதுக்கி, அவற்றின் பசியை தீர்த்து வருகிறார், பறவைகள் ஆர்வலர்.

சென்னை, புழல் மத்திய சிறை எதிரே உள்ள, வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் டென்சில், 48; உளவியல் நிபுணர்.இவரது வீட்டின் அருகே எந்நேரம் சென்றாலும், கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் பறவைகளை ரசிக்கலாம். இதற்கு காரணம், வீட்டில் அமைக்கப் பட்டு உள்ள மாடி தோட்டத்துடன் கூடிய பறவைகள் உணவகமாகும்.


latest tamil news


இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இவரை, 'பறவை' டென்சில் என்றும், அவரது வீட்டை, 'கிளி வீடு' என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.ஒரு கட்டத்தில், மாடி தோட்டத்தில் உருவான, தக்காளி, முள்ளங்கி, அவரை, மாதுளை, கொய்யா உள்ளிட்ட செடிகளை, வீட்டு தேவைக்கு பயன்படுத்தி வந்தார்.


மாறிய தருணம்இந்நிலையில், ஒருநாள், 'தொட்டியில் இருந்து கீழே சிந்திய தண்ணீரும், அதில் தாகம் தீர்த்து, சிறகடித்து குளித்த சிட்டுக்குருவிகளும் தான்' உளவியல் நிபுணரான அவரை, பறவைகள் ஆர்வலராக மாற்றின.

அன்று முதல், மாடி தோட்டம் அமைந்திருந்த, 1,300 சதுர அடி இடத்தை, பறவை உணவகமாக மாற்றி விட்டார். பறவைகள் சுதந்திரமாக, உணவருந்தி செல்ல வேண்டும் என்பதற்காக, வேறு எந்த தேவைக்காகவும், அந்த இடத்தை, அவர் பயன்படுத்துவதில்லை. தினமும், 30 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை, 5 கிலோ தினை, தலா, 1 கிலோ கம்பு, கேழ்வரகு, வெள்ளை சோளம், பொட்டுக்கடலை ஆகியவற்றை, பறவைகளுக்கு, இருவேளை உணவாக கொடுக்கிறார். அதற்காக, மாதந்தோறும், 6,000 ரூபாய் செலவு செய்கிறார்.


latest tamil newsஅதிகாலை, 5:30 மணி, மாலை, 4:30 மணி என, இரு வேளையும், பிரத்யேகமாக செய்யப்பட்ட மரப்பெட்டிகளில், பறவைகளுக்கு தேவையான உணவையும், பாத்திரங்களில் தண்ணீரையும் நிரப்பிவிடுகிறார்.


மனதுக்கு இதம்மரக்கிளைகளை, பறவைகள் அமர வசதியாக, கட்டி வைத்து உள்ளார். தங்களுக்கு ஏற்ற பாதுகாப்பான சூழல் உள்ளதால், உணவுக்காக, பச்சைக்கிளி, புறா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, காகம், சிட்டுக்குருவியை விட சிறிய பறவையான முனியா ஆகியவை, அலையடிப்பது போல், கூட்டம் கூட்டமாக வந்து, பசி, தாகம் தீர்த்து, சிறகடித்து பறக்கின்றன.

அருகில் உள்ள கொய்யா, தென்னை, வேப்ப மரங்களில் இருந்து, பறவைகளின் செல்லத் தோழனாக அணில்களும், இந்த பறவைகள் உணவகத்திற்கு, நட்போடு வலம் வருவது, பார்ப்போரை கவர்கிறது.கிளிகள் இரை உண்ணும் வரை, அவற்றுக்கு தொல்லை தராமல் புறாக்கள், எதிர் வீட்டு மொட்டை மாடி கோபுரத்தில் கூட்டமாக காத்திருக்கும், அழகான காட்சி ரசனைக்குரியதாக உள்ளது.
இங்கு, இரை தேடும் கிளிகளின் மெல்லிசை போன்ற கிளிப்பேச்சு மனதை இதமாக்குகிறது.


latest tamil newsநம் வசதிக்காக மரங்களை வெட்டி, வீடு, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொள்கிறோம். அதனால், பறவைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. பறவை, விலங்குகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது நம் தலையாய கடமையாகும். 10 ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவளித்து வருகிறேன். இதற்கான தேவைக்கான செலவை, முன்பு நான் மட்டுமே செய்து வந்தேன். தற்போது, என் நண்பர்கள் அரிசி, கோதுமை, தினை என, கொடுத்து உதவுகின்றனர். பறவைகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது.
மருத்துவர் டென்சில், 48,
புழல், சென்னை.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh M - COIMBATORE,இந்தியா
07-மார்-202019:44:05 IST Report Abuse
Ramesh M நல்ல முயற்சி. 30 கிலோ அரிசி தினமும் என்பது எப்படி. வருடம் 4 லட்சம் சிலவு செய்கிறாரா ?
Rate this:
Cancel
06-மார்-202018:27:38 IST Report Abuse
ருத்ரா பாராட்டப்பட வேண்டிய விஷயம். மனசுக்கு pleasant ஆக இருக்கும். பறவைகளை அடைத்து வளர்ப்பதை விட அதை பறக்கவிட்டு சுதந்திரமாக வந்து உண்ணும் போது கூடுதல் மகிழ்ச்சி. அவரை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
06-மார்-202018:24:25 IST Report Abuse
வாய்மையே வெல்லும் நற்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா. இந்த பறவைகள் தங்களது அன்பால் உங்களையும் உங்களது குடும்பத்தையும் வாழ்த்தும். நீடுடி வாழ்க உங்கள் பணி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X