எட்டயபுரம் : எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வர மூர்த்தி கோயிலில் அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அக்னி நட்சத்திரதோஷம் கடந்த 4ம் தேதி துவங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்தது. இதை முன்னிட்டு எட்டயபுரம் எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் கடந்த 4ம் தேதியிலிருந்து இரவு பகல் 24 மணி நேரமும் எட்டீஸ்வரமூர்த்திக்கு தாராபிஷேகம் நடந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த நாளன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. எட்டயபுரம் எட்டீஸ்வரர் மூர்த்தி கோயிலில் தாராபாத்திரம் என்ற குவிந்த அடிப்பாகம் உடைய குடம் போன்ற அமைப்பை சிவலிங்க திருமேனியின் மீது தண்ணீர் விழும்படி வைப்பது மரபு அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளும் தண்ணீர் பந்தல் வைத்து தாகம் தீர்த்ததை சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தின் மூலம் அறிகின்றோம். எனவே கத்திரி வெயில் காலத்தில் மகேசன் சேவையோடு மக்கள் சேவையும் செய்தால் சூரியக் கடவுளின் அருளும் கிடைக்கும் என்பது உறுதி. தாராபிஷேகம் நிவர்த்தியடைந்ததை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானத்தார் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE