Cell phone use may cause cancer: World Health Organization | செல்போன்களால் கேன்சர் அபாயம் : உலக சுகாதார மையம் எச்சரிக்கை| Dinamalar

செல்போன்களால் கேன்சர் அபாயம் : உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Updated : ஜூன் 01, 2011 | Added : ஜூன் 01, 2011 | கருத்துகள் (28)
Advertisement

ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் : செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கதிர்வீச்சு அபாயம் : செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pushparaj Karthik - Chennai,இந்தியா
05-ஜூன்-201109:01:34 IST Report Abuse
Pushparaj Karthik முக்கியமா லேடீஸ் இதை பின்பற்ற வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
Giri - nagercoil,இந்தியா
04-ஜூன்-201104:07:52 IST Report Abuse
Giri சரி. செல் போன் அறிவியல் தகவல்கள் இதோ: செல் போன்கள் ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தி இயங்குகிறது. இதை முறையே "Radio-fequency waves or radio-waves" என்று அழைக்கலாம். அந்த வகையில் மிக குறைந்த சக்தி கொண்ட மின்காந்த அலைகளையே (electromagentic waves) செல்போன் வெளியிடுகிறது. அந்த வகையில் இதை கதிர் வீச்சு என்று கூட அழைக்க முடியாது (காரணம் வெளிவரும் சக்தி மிக மிக குறைவு). மேலும், செல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சுகளயே நாம் காலம் காலமாக உபயோகபடுத்தி வந்த ரேடியோகளும் வெளியிடுகின்றன. ஆனால் ரேடியோகளுக்கும், செல் போன்களுக்கும் உள்ள வித்தியாசம் நாம் உபயோகபடுத்தும் விதத்தில்தான் உள்ளது. அதாவது, நாம் செல் போன்களை உபயோகபடுத்தும்போது நாம் நம் உடற்பகுதியுடன் ஒட்டி தான் பயன்படுத்துகின்றோம். ஆனால், நாம் ரேடியோகளை அவ்வாறாக பயன்படுத்தியதில்லை. எனவே, இந்த சக்தி குறைந்த ரேடியோ அலைகள் நம் உடல் திசுகளுக்குள்ளே மிக எளிதாக ஊடுருவி விடுகிறது. இதைதான் SAR ( specific absorption rate) என்று அழைக்கின்றோம். இந்த SAR, செல் போன் கம்பனிக்கு கம்பெனி, மாடலுக்கு மாடல் வேறுபடுகிறது. எனவே, செல் போன்கள் வாங்கும்போது நல்ல தரமான கம்பனிகளை தேர்வு செய்து வாங்குங்கள். அதற்கு முன்னால், அந்த குறிப்பிட்ட மாடல் செல் போன்களின் SAR 1.6watt/kg இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்த பிறகே வாங்குங்கள். China மொபைல்களை முடிந்த வரை வாங்காமல் இருப்பது உங்கள் உடல் நலனுக்கு நல்லது. செல்போன்கள் அலைகள் உடனடியாக (acute) நம் உடம்பில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு சக்தி வாய்ந்தது அல்ல...ஆனால் காலப்போக்கில் ( chronic or long-time exposure ) கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு வரும் என்பது சத்தியமே. இதை வியாபார நோக்கத்திற்காக கம்பனிகள் கூறுவதில்லை என்பதும் உண்மையே. சரி, காலப்போக்கில் என்னென்ன நோய்கள் செல் போன்களால் வர வாய்ப்பு உண்டு...? 1. Headache 2. Alzheimer's disease ( மிக கொடிய வகை மறதி நோய்; உயிரை குடிக்கும் வல்லமை இதற்கு உண்டு) 3. Parkinson's disease ( நரம்புகளை முடக்கும் வியாதி) 4. Brain tumour ( மூளை புற்றுநோய்) 5. fatigue ( உடற்தளர்ச்சி ) 6. Cancer ஆம். இவை அனைத்தும் சத்தியமான உண்மையே! ஆனால், உங்கள் உடற் எதிர்ப்பு சக்தியை பொருத்து இவை எதுவும் வராமலோ, அல்லது மிக குறைந்த அளவிலோ பாதிப்புகளை உருவாக்கலாம். அல்லது, மிக சீக்கிரமாகவும் பாதிப்புக்கு உள்ளாகலாம். கண்டிப்பாக நம்மால் செல்போன்களை இழந்து வாழ முடியாது. எனவே, சில செல்போன் உபயோக பாதுகாப்பு அம்சங்களை நமது தமிழ் சகோதரர்களுக்காக கொடுக்கின்றேன் : 1. நீண்ட நேரம் பேசுவதானால், கண்டிப்பாக hands-free பயன்படுத்துங்கள் 2. நீண்ட நேரம் பேசி முடித்தவுடன், குளிர்ந்த நீரால் காது மடல்களையும், முகத்தையும் கண்டிப்பாக கழுவுங்கள் ( ஏனெனில், Radio-waves உங்கள் திசுக்களை சூடு பண்ணும் அழவிற்கு சக்தி கண்டிப்பாக உண்டு) 3. இரவு தூங்கும் பொது, கண்டிப்பாக தலையணை அடியிலோ அல்லது தலை அருகிலோ செல் போன்கள் வைப்பதை தயவு செய்து தவிருங்கள். 8 மணி நேரம், 20 வருடம் கண்டிப்பாக நோயின் வாய்ப்புகளை அதிகப்படுத்தி, நோயின் தன்மைகளையும் வீரியப்படுத்தும். 4. இனி வரும் காலங்களில் வெளிவரும் செல்போன்களில் SAR தகவல்கள் sticker ஒவ்வொரு செல்போன்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சட்டம் கொண்டு வர வேண்டியது, நம் தமிழக அரசின் கடமை. தினமலரே, அரசுக்கு எடுத்துரைப்பாயா? (அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது.) நன்றி. கிரிதரன் L M
Rate this:
Share this comment
Cancel
Sathiyaseelan - Cuddalore,சிங்கப்பூர்
02-ஜூன்-201108:18:04 IST Report Abuse
Sathiyaseelan செல் போனை நேரடியாக காதில்வைத்து பேசாமல் Heat set மூலமாக பேசினால் கதிர் வீச்சினால் ஏட்படும் பாதிப்பினை தவிக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X