ஹெட்லி, ராணா மீதான வழக்கு: வரும் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு

Added : ஜூன் 02, 2011 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஹெட்லி, ராணா மீதான வழக்கு: வரும் 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு

சிகாகோ: மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர் டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியர் தகாவுர் ராணா ஆகியோர் மீதான விசாரணை முடிந்து, வரும் 8ம் தேதி தீர்ப்பு கூறப்பட உள்ளது.


மும்பையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட நான்கு இடங்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் அமெரிக்கர்கள் ஆறு பேர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை நடத்துவதற்காக மும்பைக்கு பலமுறை வந்து நோட்டமிட்டு சதித் திட்டத்தை அரங்கேற்ற உதவியவர், சிகாகோவில் வசித்த பாகிஸ்தானியர் டேவிட் கோல்மேன் ஹெட்லி. இவரது பள்ளி நண்பன் தகாவுர் ராணா. இவர், கனடா நாட்டில் வசித்து வந்தார். ராணா மூலமாக விசா பெற்று இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஹெட்லி வந்து சென்றுள் ளார். கடந்த 2009ம் ஆண்டு ஹெட்லியையும், ராணாவையும் சிகாகோ போலீசார் கைது செய்தனர். மும்பையில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஹெட்லி ஒப்புக் கொண்டதால் அவருக்கு வழங்கப்பட இருந்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.


இந்நிலையில், இவர்களுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் மேஜர் இக்பால், மேஜர் அலி உள்ளிட்ட ஏழு பேர் குறித்த விசாரணை சிகாகோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஹெட்லியிடம் கடந்த வாரம் விசாரணை நடந்தது. இந்தியாவுக்கு வந்து நோட்டமிட்டதையும், இரண்டு முறை தாக்குதல் நடத்த இருந்த முயற்சி தோல்வியடைந்ததையும், மும்பையில் ஜெர்மன் பேக்கரியை தகர்க்க திட்டமிட்டதாகவும் ஹெட்லி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, இவரது நண்பர் ராணாவிடம் இரண்டு நாட்களாக விசாரணை நடந்தது. தன்னை நம்ப வைத்து ஹெட்லி ஏமாற்றி விட்டதாகவும், ஹெட்லியால்தான் பயங்கரவாத செயலுக்கு துணை போனதாகவும், மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.எஸ்.ஐ., அதிகாரி மேஜர் இக்பால் தன்னை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், ராணா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இவர்கள் குறிப்பிட்ட ஏழு சாட்சிகளிடம் நேற்று விசாரணை நடந்தது. இந்நிலையில், இவர்கள் மீதான தீர்ப்பு வரும் 8ம் தேதி கூறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan.Su - Chennai,இந்தியா
03-ஜூன்-201109:09:04 IST Report Abuse
Nagarajan.Su 2009 செப்டம்பரில் கைது செய்தவர்களுக்கு 2011 ஜூனில் நீதிமன்ற தீர்ப்பு. சபாஷ் அமெரிக்க நீதிமன்றங்கள் எவ்வளவு விரைவாக செயல்படுகின்றன. ஆனால் இதுவே இந்தியாவில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்து அரசு மற்றும் மக்களின் போதுபனத்தை கோடி கோடியாக வீணடிப்பார். அப்சல்குரு மற்றும் பலர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தியா எப்போது திருந்தப்போகிறதோ?
Rate this:
Cancel
Veera Vaniyar Peravai - Vilupuram,இந்தியா
03-ஜூன்-201109:04:43 IST Report Abuse
Veera Vaniyar Peravai தன்விணை தன்னை சுடும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
03-ஜூன்-201105:47:28 IST Report Abuse
Anand அப்பாவி மனிதர்களை அழித்து விட்டு நீ மட்டும் வாழுந்து விட முடியாது !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X