அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை, மதுரை, கோவை, திருச்சிக்கு மோனோ ரயில்

Added : ஜூன் 04, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை : ""சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வர காலதாமதமாகும் என்பதால், தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில், "மோனோ' ரயில் திட்டம் கொண்டு வரப்படும்,'' என, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சென்னை மற்றும் பிற நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நிர்வாகத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்தில், பொதுப் போக்குவரத்தின் பங்கு 27 சதவீதம். இது, 2026ல் 46 சதவீதத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். இதற்காக, ஒருங்கிணைந்த பன்முறை போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்.தற்போது செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டம் 45 கி.மீட்டர் அளவிற்கே திட்டமிடப்பட்டுள்ளது. மூலதன செலவு அதிகமாக உள்ள இத்திட்டம், செயல்பாட்டிற்கு வர மிகுந்த காலமாகும். சென்னை மாநகருக்கு தற்போதுள்ள போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட, "மோனோ' ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.முதல் கட்டமாக 111 கி.மீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக 300 கி.மீட்டர் வரை விரிவுபடுத்தப்படும். கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளிலும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pamaran A - chennai,இந்தியா
04-ஜூன்-201111:28:38 IST Report Abuse
Pamaran A "பறக்கும் ரயில் திட்டத்தின் முழு பலனையும் தமிழகம் கடந்த ஆட்சியில் பெற்றுவிட்டது"--எங்கே பெற்றது ? பறக்கும் ரயில், பரங்கி மலைக்கு வர முடியாமல் , வேளச்சேரி-இலே 10 வருடமாய் நின்றது தான் பெற்ற பிரயோசனம்.
Rate this:
Cancel
Raja Pakkirisamy P - chennai,இந்தியா
04-ஜூன்-201107:36:36 IST Report Abuse
Raja Pakkirisamy P இலவசங்கள் எந்த ஆட்சியில் மறுக்கபடுகிறதோ அந்த ஆட்சியாளர்கள்தான் மக்களை நல்வழிபடுத்தி சுறுசுறுப்புடன் செயல்பட உதவி செய்பவர்கள்.
Rate this:
Cancel
Raja Pakkirisamy P - chennai,இந்தியா
04-ஜூன்-201107:32:35 IST Report Abuse
Raja Pakkirisamy P ஏற்கனவே பறக்கும் ரயில் திட்டத்தின் முழு பலனையும் தமிழகம் கடந்த ஆட்சியில் பெற்றுவிட்டது. இந்த ஆட்சியில் மோனோ ரயில் திட்டம் தமிழக மக்களுக்கு கிடைக்க உள்ளது. தமிழக மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X