அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும்: கருணாநிதி பேச்சு

Updated : ஜூன் 07, 2011 | Added : ஜூன் 05, 2011 | கருத்துகள் (182)
Advertisement

திருவாரூர்: திருவாரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், நேற்று இரவு நடந்தது.

பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் நான், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, என்னை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் ஓட்டளித்த மக்கள் அனைவரும் என்னுடைய நன்றிக்கு உரியவர்கள். நீங்கள் விரும்பியபடி நான் முதல்வராகவில்லை. உங்கள் எம்.எல்.ஏ.,வாகியுள்ளேன். உங்களுக்கு, நான் நேரடியாகவோ, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மூலமாகவோ அனைத்து பணிகளையும் செய்வேன். புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் கவர்னர் உரையைக் கூட, அச்சுப் பிழையின்றி தயாரிக்க இயலாதவர்களாக உள்ளனர். அவர்களை அறியாமலே ஒரு விஷயத்தை குறிப்பிட்டுள்ளனர். அதில், ஜெ., தலைமையில் அமைந்துள்ள இந்த புதிய அரசும், ஏழைகளின் நலனைக் கருதியே செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். தமிழ் தெரிந்தவர்களுக்கு இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியும். பழைய அரசு ஏழைகளின் நலனுக்காக பாடுபட்டது போல், இந்த அரசும் செயல்படும் என்று கூறியுள்ளனர். இதை புதிய அரசு கொடுத்த பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன்.


"சட்ட விரோதமான முறையில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறுதாவூரும் அடங்க வேண்டும் என்று விரும்புகிறேன். காலாகாலத்துக்கும் மாற்றம் வேண்டும் என்ற வார்த்தை இருந்தே தீரும். இந்த வார்த்தை, வரும் காலத்தில் ஒலித்தே தீரும். அப்போது மாற்றம் வரும் என்று உறுதியோடு இருக்கிறோம். திருவாரூரில், 1,000 கோடி ரூபாய் செலவில் மத்திய பல்கலை கடந்தாண்டு துவங்கப்பட்டு, 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டட பணிகள் ஓரளவுக்கு நிறைவு பெற்றுள்ளன. இந்த ஆண்டு, 500 மாணவர்கள் மத்திய பல்கலையில் சேர்க்கப்படுவர். புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். இந்த பல்கலையை நான் வாதாடி, போராடி, வலியுறுத்தி கொண்டு வந்துள்ளேன். மத்திய அரசின் பல்கலை என்பதால், இதற்கு ஆபத்து வந்துவிடாது என்று நினைக்கிறேன். வீடு வழங்கும் திட்டம் பணக்காரர்களுக்கு அல்ல. கடும்வெயில் என்றும் பாராமல் உழைக்கும் பாட்டாளிக்காக அறிவித்தேன். இத்திட்டத்தை கைவிடுவதாக அரசு சொல்கிறது. கைவிடுங்கள் அது உங்கள் பழக்கம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் பாமரர்கள், பாட்டாளி மக்கள் தான்.


பத்திரிகைகளில் என்னைப் பற்றி, என் மனைவியைப் பற்றி, என் மகளைப் பற்றி, பேரன்களைப் பற்றிக் கூட செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செயல்களால், தி.மு.க.,வை வீழ்த்தி விட முடியாது. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்துவிட, வேரை அறுத்துவிட, எந்த கொம்பனும் பிறக்கவில்லை. தி.மு.க., செய்திகளை இருட்டடிப்பு செய்வது, விஷமத்தனமாக செயல்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றுக்கு இடையேதான் கழகத்தை வளர்க்க வேண்டும். கொள்கைக்காக வாழும் என்னை, யாரும் வீழ்த்த முடியாது. திகார் சிறையில் கனிமொழியை நான், மகள் செல்வியுடன் சந்தித்த போது, "இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். இதையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தியை தி.மு.க., தந்துள்ளது' என்று கூறினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி ஊழல் என்று சொல்லப்பட்டது. விசாரணையில், 30 ஆயிரம் கோடியாகி, மேலும் மேலும் சுருங்கி, யாராவது ஒரு குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்றால், கனிமொழியை சி.பி.ஐ., சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்காலத்தில், கனிமொழி வாழ்க்கைக்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக, கலைஞர் "டிவி'யில் பங்குதாரராக ஆக்கினேன். அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட கேடு, கனிமொழியையும் பாதித்துள்ளது. எதிர்காலத்தில் இதைப் பார்த்து, கனிமொழிக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன். வேதனை என்னை மாய்த்துவிடும் முன், நான் தி.மு.க.,வை காக்க, லட்சியங்களை, கொள்கைகளை காக்க என்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டுத் தான் மறைவேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (182)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
criminal in politics - delhi,இந்தியா
07-ஜூன்-201112:44:35 IST Report Abuse
criminal in politics " மாற்றம் வேண்டும் என்கின்ற வார்த்தை இருந்தே தீரும் " இந்த வாக்கியத்தை பேசுவதற்கு " நன்றி தெரிவிக்கும் கூட்டம் " என்கின்ற பெயரில் ஒரு மேடை, ஒரு கூட்டம் , இக்கூட்டத்தில் " மாற்றம் வேண்டும் என்கின்ற வார்த்தை இருந்தே தீரும் ", என்கின்ற வாக்கியத்தை மிக அழுத்தம் திருத்தமாக, உணர்ச்சி பொங்க , தெரிவித்து இர்ருகிறார் அதாவது இவர் மறைமுகமாக சொல்ல விரும்புவது என்னவென்றால் .... மக்கள் எல்லோரும் " மாற்றம் வேண்டும் " என்கின்ற வார்த்தையால் கவரப்பட்டு, மனம் மாறி வாகளிதுவிட்டனராம்......வேற எந்த காரணமும் இல்லையாம் ..... ஆட்சி போவதற்கு காரணமாக இருந்த குடும்ப ஆட்சி , குடும்ப தலையீடு ...அராஜகம், மின் வெட்டு, கேபிள் டிவி வசூல், நகரத்து வாசிகளின் சொத்துகளை குறி வைத்து நடத்தப்பட்ட கொலைகள், இவை எல்லா வற்றையும் மிக கச்சிதமாக மறைத்து ,தன் கட்சிகாரர்களையும்,மற்ற கட்சிகாரரர்களையும் தந்திரமாக ஏமாற்றும் செயல்
Rate this:
Share this comment
Cancel
Jitonet - New York,யூ.எஸ்.ஏ
07-ஜூன்-201108:30:53 IST Report Abuse
Jitonet ஐயாமார்களே! தாய்க்குலமே! இப்படி இந்த கருணாநிதி கும்பல் எந்தனை நாளைக்கு திராவிடர் என்றும், தமிழர் என்றும், பிற்பட்ட மக்கள் என்றும் முதலைக்கண்ணீர் விட அதில் யேமாரப்போகிறீர்கள்? பெரியார், அண்ணா கருணாநிதி எல்லாம் சமூகத்தில் உள்ள குறைகளை தங்கள் சுயநலத்திற்காக மக்களை முட்டாளாகி பயன்படுத்திக்கொண்ட பாதகர்கள்! பகுத்தறிவு என்று பேசிபேசியே மக்களை எந்த அறிவும் இல்லாமல் செய்து விட்டார்கள்! என்றுதான் இறைவன் கொடுத்த அறிவுகளை உபயோகிக்க போகிறோம்?
Rate this:
Share this comment
Cancel
seetha - KRS,நார்வே
06-ஜூன்-201122:07:13 IST Report Abuse
seetha ஐயா S.மனோகர், உங்க வீடு புகுந்து திருடுருவன் வயசானவன் என்றல் சும்மா விடுவீர்கள .... ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X