கடாபி பதவி விலகுவதை தவிர வேறு வழில்லை: சி.ஐ.ஏ.,

Added : ஜூன் 10, 2011
Share
Advertisement

வாஷிங்டன்: லிபியா அதிபர் கடாபிக்கு சர்வதேச நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகுவதை தவிர வேறு வழியில்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் தலைவர் தெரிவித்துள்ளார்.லிபியாவை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியை பதவி விலகக் கோரி, அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க அரசுப் படைகள் விமான தாக்குதல் நடத்தியதில், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இதையடுத்து, அதிருப்தியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேட்டோ படைகள், கடாபிக்கு எதிராக களமிறங்கின. இந்நிலையில் அ‌மெரிக்காவின் செனட் சபையில் சி.ஐ.ஏ. அமைப்பின் தலைவர் லியோன்பெனிட்டா உரையாற்றி போது கூறுகையில், லிபாயில் அதிபர் மொமர் கடாபியின் ஆதரவுப் படைகள் வலுவிழந்து வருகின்றன. நேட்டோ படைகளின் கையே தற்போது ஓங்கி நிற்கிறது. மேலும் சர்வதேச அளவில் அதிபர் கடாபி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகுவதைத்தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே கடாபி மீது சர்வதேச கோர்ட்டில் போர் குற்ற வழக்கு நடந்து வருகிறது. இதில் ஆஜராகி பேசிய வக்கீல் ஒருவர் லிபியாவில் எதிர்ப்பு பிரிவைச் சேர்ந்த பெண்களை கூட்டாக கற்பழிக்குமாறு தனதுஆதரவு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக அவர் வ‌யகரா போன்ற ஒரு வகை மருந்தினை உட்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X