சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் தொழில் மூலம் கோடிகள் குவிப்பு: வடமாநில கும்பல் அராஜகம்

Added : ஜூன் 07, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
தஞ்சாவூர்; தஞ்சையில் வடமாநில பெண் விவகாரத்தில் சிக்கிய ஐந்து பேர் கும்பல், பாலியல் தொழில் மூலம் கோடிகளில் சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது. தஞ்சாவூரில், வீட்டு வேலைக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில பெண், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பான புகாரில், அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய செந்தில்குமார், ௪௯, அவரது மனைவி ராஜம், ௪௭,
 பாலியல் தொழில் மூலம் கோடிகள் குவிப்பு: வடமாநில கும்பல் அராஜகம்

தஞ்சாவூர்; தஞ்சையில் வடமாநில பெண் விவகாரத்தில் சிக்கிய ஐந்து பேர் கும்பல், பாலியல் தொழில் மூலம் கோடிகளில் சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூரில், வீட்டு வேலைக்கு அழைத்து வரப்பட்ட வடமாநில பெண், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி துன்புறுத்தப்பட்டார். இது தொடர்பான புகாரில், அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய செந்தில்குமார், ௪௯, அவரது மனைவி ராஜம், ௪௭, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எஸ்.ஐ., பிரபாகரன், ௬௪, ராமச்சந்திரன், ௪௦, பழனிசாமி, ௫௧, ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நான்கு கார்கள், மூன்று பைக்குகள், நான்கு மொபைல்போன்கள், ஒரு டைரி ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய வழக்கில் சிக்கிய, ஐந்து பேரிடம் விசாரித்தது குறித்து, போலீசார் கூறியதாவது: தஞ்சையில், உரிமையாளர்கள் அருகில் இல்லாத வீடாக பார்த்து, எட்டு வீடுகளை ஒத்தி மற்றும் வாடகைக்கு எடுத்து, செந்தில்குமார், ராஜம் ஆகியோர், 10 ஆண்டுகளாக, பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இதற்கு மூளையாக, 'சஸ்பெண்ட்' எஸ்.ஐ., பிராபாகரன் செயல்பட்டதுடன், போலீஸ் பிரச்னை எதுவும் வராமல் பார்த்துக் கொண்டார். மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ராஜத்திடம் ஆயிரம் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்கள் உள்ளது. இதில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என, பலரும் உள்ளனர். தமிழ் பெண்களை விட, வட மாநில பெண்களை பாலியல் தொழிலுக்கு அதிகம் பயன்படுத்தியுள்ளனர். பிரச்னை எதுவும் வராது என்பதற்காக, இந்த முறையை கையாண்டுள்ளனர். இதற்காக வடமாநிலத்தில் பல புரோக்கர்கள் வைத்து இருந்தனர். இவர்களிடம் தொடர்பிலிருந்த பல போலீசார், தற்போது ஓய்வு பெற்று விட்டு சென்று விட்டாலும், அவர்களும் தேவையான உதவிகளை செய்து கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் தான் பெரிய அளவில் இதுவரை சிக்காமல் பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யமே நடத்த முடிந்திருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயும் சம்பாதித்துள்ளனர். மேலவஸ்தாசாவடியில் உள்ள வீடு மட்டும், ௩.௫ கோடி மதிப்பு கொண்டது என தெரிய வந்தது.இவர்களின் தொழில் குறித்து தெரிந்ததால், வீடு மற்றும் கார்களை வாடகைக்கு கொடுத்தவர்கள், கலக்கம் அடைந்துஉள்ளனர். செந்தில்குமார் ஏற்கனவே, பாலியல் தொழில் தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
13-ஜூன்-202016:14:17 IST Report Abuse
Tamilnesan குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரவது ஒரு அரசியல்வியாதியை கையை காட்டினாள் போதும், இவர்களை கோர்ட் உடனே ஜாமீனில் விட்டு விடும்.
Rate this:
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
11-ஜூன்-202011:34:04 IST Report Abuse
Kumar periyaar இவர்கள் மதத்தில் இது தவறு என்று சொல்ல வில்லையா
Rate this:
Cancel
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
10-ஜூன்-202010:52:45 IST Report Abuse
Kumar வடநாட்டு கலாச்சாரம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X