குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது: ராகுல்| Gujarat model exposed: Rahul's attack on COVID-19 mortality rate | Dinamalar

குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது: ராகுல்

Updated : ஜூன் 16, 2020 | Added : ஜூன் 16, 2020 | கருத்துகள் (41)
Share
Rahul, Gujarat Model, Mortality Rate, Congress, BJP, politics, opposition, mortality rate, COVID-19 patients,  Maharashtra, Tamil Nadu, Congress leader, coornavirus crisis, covid-19 patients, covid-19 death, india, ராகுல், காங்கிரஸ், குஜராத் மாடல், அம்பலாகிவிட்டது, கொரோனா, வைரஸ், உயிரிழப்பு, விகிதம்

புதுடில்லி: நாட்டிலேயே கொரோனா தொற்று உயிரிழப்பு விகிதம் அதிகம் கொண்ட மாநிலமாக குஜராத் இருப்பதை அடுத்து, ‛குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது' என காங்., எம்.பி., ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமாக மஹாராஷ்டிரா திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து, தமிழகம், டில்லி, குஜராத் மாநிலங்கள் உள்ளன. ஆனால் உயிரிழப்பு விகிதங்களை பொறுத்தவரையில் குஜராத் முன்னிலையில் உள்ளது. இதனை குறிப்பிட்டு காங்., எம்.பி., ராகுல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‛கொரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதம்: குஜராத் - 6.25 சதவீதம், மஹாராஷ்டிரா - 3.73 சதவீதம், ராஜஸ்தான் - 2.32 சதவீதம், பஞ்சாப் - 2.17 சதவீதம், புதுச்சேரி - 1.98 சதவீதம், ஜார்க்கண்ட் - 0.5 சதவீதம், சத்தீஸ்கர் - 0.35 சதவீதம். குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது,' எனப் பதிவிட்டுள்ளார்.latest tamil news


அதாவது, பாஜ., ஆளும் மாநிலங்களை விட, காங்., தலைமையிலான அரசு மற்றும் காங்., ஆதரவில் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் கொரோனா வைரசை கையாள்வது சிறப்பாக இருப்பதாகவும், உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் ராகுல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X