இயற்கை உரங்களை இடுவீர் இணை இயக்குனர் அறிவுரை| Villupuram District News | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரங்களை இடுவீர் இணை இயக்குனர் அறிவுரை

Added : ஜூன் 13, 2011
Share
விழுப்புரம் : விவசாயத்தில் மண் வளத்தைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெற இயற்கை உரங்களை இட வேண்டும். இது குறித்து வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தேவைப்படும் ரசாயன உரங்களை அளவாக இடவேண்டும். இயற்கையான தொழு உரம், பசுந்தாள் உரம், மற்றும் தழை உரங்களை போதியளவு இடவேண்டும். காற்றில் உள்ள தழைச் சத்தை கிரகிக்கும் உயிர் உரங்களை இட

விழுப்புரம் : விவசாயத்தில் மண் வளத்தைப் பாதுகாத்து நல்ல மகசூல் பெற இயற்கை உரங்களை இட வேண்டும். இது குறித்து வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தேவைப்படும் ரசாயன உரங்களை அளவாக இடவேண்டும். இயற்கையான தொழு உரம், பசுந்தாள் உரம், மற்றும் தழை உரங்களை போதியளவு இடவேண்டும். காற்றில் உள்ள தழைச் சத்தை கிரகிக்கும் உயிர் உரங்களை இட வேண்டும். பாசன நீர் பரிசோதனை செய்தும், உரிய நீர் மேலாண்மை முறைகளை கடைபிடித்து மண்வளத்தை பாதுகாத்தல் வேண்டும். படிகட்டு சாகுபடி, குறுக்குச் சாலர் உழவு செய்தல், மரங்களை நடவு செய்தல், வேர் பிடிப்பு மிக்க வெட்டிவேர், கற்றாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து மண் அரிமானத்தை தடுத்தல், வடிகால் வசதியை சீராக்கி, மண் வகைக்கேற்ப பயிர்களை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் கூறினார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X