பொது செய்தி

இந்தியா

டாக்டரின் கொரோனா சிகிச்சைக்கு நிதி கேட்டு ஏழைத் தந்தை வெளியிட்ட வீடியோவால் குவிந்தது உதவி

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

போபால்: ம.பி., நீச் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதயைடுத்து அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். அவர் சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்த ஏழை விவசாயி தந்தை வெளியிட்ட வீடியோவால் நிதி உதவி குவிந்தது.



latest tamil news



ம.பி., நீச் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராஜிந்தர் சவுத்ரி ஏழை விவசாயி. இவர் தன் மகன் ஜோஹிந்தரை டாக்டருக்கு படிக்க வைத்தார். மருத்துவ படிப்பை முடித்த ஜோஹிந்தர் டில்லியில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் ஜூனியர் மருத்தவராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா வார்டில் பணியாற்றிய அவர் பல நோயாளிகள் குணமாக உதவினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்றியது. வேலை பார்த்த மருத்துவமனையிலேயே ஜோஹிந்தர் அனுமதிக்கப்ட்டார்.

இது குறித்து ஜோஹிந்தர் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏழை விவசாயி ராஜீந்தர் சவுத்ரி உடனடியாக டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு, டாக்டரின் உடல்நிலை மோசமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இததை் தொடர்ந்து ஸ்ரீகங்காராம் தனியார் மருத்துவமனையில் ஜ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு டாக்டரின் தந்தையிடம் பணம் இல்லை. இதனால், தவித்துப் போன அந்த அப்பாவி தந்தை தன் மகனை காப்பாற்ற உதவி கோரி சமூகவலைதளத்தில் உருக்கமானா வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவ ராஜிந்தருக்கு நிதி வந்து குவிந்தது.

'பணத்தை பற்றி கவலை வேண்டாம் நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணம் அனுப்பி வைத்துள்ளனர் ஜோஹிந்தருடன் பணி புரிந்த மருத்துவர்கள் மட்டும் ரூ 3 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். இத் தகவல் அறிந்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் டாக்டர் ஜோஹிந்தருக்கு உதவும் படி அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளார்.


latest tamil news



இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாவது,' இப்போது ஐ.சி.யு.,வில் சிகிச்சை பெற்று வரும் சவுத்ரிக்கு மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து செல்லும் போது எங்களால் முடிந்த உதவி செய்வோம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

டாக்டர்கள் செய்த உதவியால் நெகிழந்து போன ஏழைத் தந்தை ' என் மகனுக்கு உதவி செய்ய இத்தனை பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை உதவி செய்த அனைவருக்கும் நன்றி. மகனை தனியார் மருத்துவமனையில் சேர்த்ததால் சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்தேன்' இவ்வாறு அவர் கூறினார்

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜூலை-202000:16:53 IST Report Abuse
தமிழ்வேல் சென்னையில் 20 லட்சம் கட்டினால்தான் அட்மிஷன்.
Rate this:
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
18-ஜூலை-202023:24:30 IST Report Abuse
magan நல்ல மனித நேயம் உள்ளவர்கள்
Rate this:
Cancel
சோலைபட்டி பார்த்திபன் அடுத்தவர்களின் கஷ்டத்தை நம்ம கஷ்ட்டமாக என்னும் நாட்டில் தான் நாம் இருக்கிறோம்.... எல்லோரும் இந்தியாவின் பிள்ளைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X