குவைத்தில் மேலும் 683 பேருக்கு கொரோனா| Dinamalar

குவைத்தில் மேலும் 683 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020
Share

குவைத் : குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 683 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்புகளை குறைக்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொள்கிறது. குவைத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 683 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,904 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news



குவைத்தில் கொரோனா பாதிப்புகளால் இதுவரை 407 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக தொற்று பாதித்த நோயாளிகளில் 430 பேர் குவைத்தையும், 253 பேர் பிற நாடுகளையும் சேர்ந்தவர்கள். இவர்களில் 137 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X