பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு, 'சோலார் பம்ப்செட்' வேளாண் துறையினர் நடவடிக்கை

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'மின் வாரியத்தில், இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு, 'சோலார் பம்ப்செட்' வழங்கப்படும்' என, வேளாண் துறை அறிவித்துள்ளது.

வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழகத்தில், 2013 - 14 முதல் விவசாயிகளுக்கு, சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், 'சோலார் பம்ப்செட்' வழங்கப்படுகிறது. சோலார் பம்ப்செட் வாயிலாக, பகல் நேரங்களில் தடையின்றி, 8 மணிநேரம் பாசனம் செய்ய முடியும். தமிழகத்தில், 17 ஆயிரத்து, 500 சோலார் பம்ப்செட் வழங்குவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம், மத்தியஅரசு, 30 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீதம்; விவசாயிகள், 30 சதவீதம் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐந்து குதிரைத்திறன் முதல், 10 குதிரைத்திறன் உள்ள சோலார் பம்ப்செட்டுகள் வழங்கப் படுகின்றன. இதற்காக, 1.63 லட்சம் ரூபாய் முதல் 3.07 லட்சம் ரூபாய் வரை, விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தரமான சோலார் பம்ப்செட்டுகளை வழங்குவதற்கு, பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.மின் வாரியத்தில், இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன் பெறலாம். இதனால், இலவச மின் இணைப்பு பெறுவது பாதிக்காது.

இலவச மின் இணைப்பு வரும்போது, சோலார் பம்ப்செட்டுகளை, மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு, வேளாண் பொறியியல் துறையின், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சம்மத கடிதம் கொடுத்தால் போதும். சேலார் பம்ப்செட் தேவைப்படும் விவசாயிகள், மின் வாரியத்தில், இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்,மாவட்ட செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, சென்னை நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையின், தலைமை பொறியாளர் அலுவலகத்தை, 044 - 2951 5322, 2951 0822, 2951 0922 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
20-ஜூலை-202007:08:36 IST Report Abuse
Loganathan Kuttuva சோலார் பேனல் மூலம் இலவச மின்சாரம் கிடைக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X