மதுரை அரசு மருத்துவமனைக்கு 7000 மி.லி., பிளாஸ்மா கிடைக்கிறது; தொற்றில் மீண்ட 14 பேர் தானத்திற்கு ரெடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனைக்கு 7000 மி.லி., பிளாஸ்மா கிடைக்கிறது; தொற்றில் மீண்ட 14 பேர் தானத்திற்கு 'ரெடி'

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020
Share
Madurai, PlasmaTherapy, GovtHospital, PlasmaDonation, மதுரை, அரசு மருத்துவமனை, பிளாஸ்மா, தானம், சிகிச்சை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் தொற்றில் இருந்து மீண்ட 14 பேர், பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். இவர்கள் மூலம் 7 ஆயிரம் மி.லி., பிளாஸ்மா கிடைக்கும்.

சென்னை, மதுரையில் பிளாஸ்மா சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் இதுவரை 5 பேர் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனர். இவர்களிடம் தலா 500 மி.லி., வீதம் 2500 மி.லி., பெறப்பட்டது. இதன் மூலம் பெண் உட்பட 4 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். மூவர் கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் தொற்றில் இருந்து மீண்ட மேலும் 14 பேர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். இதில் மூவருக்கு நேற்று முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


latest tamil news


கொரோனா, ஆன்டிபாடிகள் உற்பத்தியை அறியும் எலிசா பரிசோதனைகள் நடந்தன. மற்றவர்களுக்கும் பரிசோதனை நடக்கிறது. இன்று முதல் இவர்களிடம் பிளாஸ்மா தானம் பெறும் பணி நடக்க உள்ளது. இவர்கள் மூலம் 7 ஆயிரம் மி.லி., பிளாஸ்மா பெறலாம். ஒவ்வொரு நோயாளிக்கும் தலா 200 மி.லி., பிளாஸ்மா செலுத்தப்படும். தேவைப்படின் இன்னொரு முறை 200 மி.லி., ஏற்றப்படும். அதிகபட்சம் ஒருவருக்கு 400 மி.லி., வரை தேவைப்படும். அந்தவகையில் 14 பேரின் பிளாஸ்மா குறைந்தபட்சம் 17 பேரின் உயிரை காக்கும். இவர்கள் மீண்டும் ஒரு முறை தானம் செய்ய முடியும். தொற்றில் இருந்து மீண்ட மற்றவர்களும் தானத்திற்கு முன்வரலாம்.

டீன் சங்குமணி கூறுகையில், 'இதுவரை 540 பேரிடம் பிளாஸ்மா தானத்திற்கு பேசியுள்ளோம். வருகிற நாட்களில் தானம் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X