தமிழகத்தில் குறையும் பாதிப்பு; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் குறையும் பாதிப்பு; அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 04, 2020 | கருத்துகள் (6)
Share
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் இன்று (ஆக.,04) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது நேற்றைய டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை (5,800 பேர்) விட அதிகமாகும். அதேபோல், இன்று 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது நேற்றைய பாதிப்பை (5,609 பேர்) விட குறைவாகும். இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைவாகவும், குணமடைந்தவர்கள் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.


latest tamil news



தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,035 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 28 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 125 ஆய்வகங்கள் (அரசு-60 மற்றும் தனியார் 65) மூலமாக, இன்று மட்டும் 55,122 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 28 லட்சத்து 92 ஆயிரத்து 395 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news



இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,041 பேர் ஆண்கள், 2,022 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,62,476 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,05,782 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,501 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 08 ஆயிரத்து 784 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 108 பேர் உயிரிழந்தனர். அதில், 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 55,152 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 13 ஆயிரத்து 276 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 21 ஆயிரத்து 383 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 33 ஆயிரத்து 626 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X