ஐ.நா. பொதுச்செயலராக மீண்டும் பான்கீமூன்

Added : ஜூன் 18, 2011
Share
Advertisement

நியூ யார்க்,: : ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் பான் கி மூன் அப்பதவியில் மேலும் 5 ஆண்டுகள் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளன. உலகின் மிக உயர்ந்த அமைப்பு ஐ.நா. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தலைமையகம் உளளது. மொத்தம். 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு நேற்று நடந்த கூட்டத்தில் பான்கீ=மூனை மீண்டும் ஐந்தாண்டு பொதுச்செயலாளர் பதவியை தொடர ஆதரவளித்து வாக்களித்தது. இதைத் தொடர்ந்து வரும் செவ்வாயன்று (ஜூன் 21) 192 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுக்குழு அவரை அந்தப் பதவியில் நீடிக்கச் செய்யும் விதமாக ஆதரவளித்து ஓட்டுப்போடும் என்பது உறுதியாகி உள்ளது. பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல் பெற்றுவிட்டதால் பான்கீ- மூ ஐ.நா.பொதுச்செயலராவார். கொரியாவைச் சேர்ந்த பான் கி மூனுக்கு 67 வயதாகிறது. 2006-ம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு தென் கொரியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார். ஐ.நா. பொதுச் செயலாளராக இவரது இரண்டாவது பதவிக்காலம் 2012-ம் ஆண்டு தொடங்கி. 2016 வரை இப்பதவியில் இருப்பார்.




Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X