அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியின் ஆன்மிக அரசியல் மாற்றத்திற்கு ராமதாஸ் ஆதரவு?

Updated : செப் 15, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (52)
Share
Advertisement
ரஜினி, ஆன்மிக அரசியல், ராமதாஸ்

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியல் மாற்றத்திற்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினி, வரும் நவம்பரில் கட்சி துவக்குவது உறுதியாகி உள்ளது.இந்நிலையில், அவரது கட்சியுடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கொரோனா காலத்திற்கு முன், ரஜினியும், அன்புமணியும் சந்தித்து பேசியதாகவும், ரஜினி கட்சி துவக்கினால், அவரது கட்சியுடன் பா.ம.க., கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியானது.

பாபா படம் பிரச்னை விவகாரம் தொடர்பாக, பா.ம.க.,வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் நிலவிய மோதல் மறைந்து, தற்போது இரண்டு தரப்பிலும், இணக்கம் உருவாகி உள்ளது. தேர்தலுக்கு தேர்தல், பா.ம.க.,வின் அணுகுமுறை வித்தியாசமாகவே இருக்கும். குறிப்பாக, தனக்கு பிடிக்காத கட்சிகளுக்கு, மார்க் போடுவது ராமதாஸ் பாணி.

வரும், 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலுக்கு தயராகும் ராமதாசிடம் நிறைய மாற்றம் உருவாகி உள்ளது. நேற்று முன்தினம், தனியார் 'டிவி'க்கு ராமதாஸ் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், டாஸ்மாக், இட ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் அடிப்படையில், அ.தி.மு.க., அரசின் குறைகளை சுட்டிக்காட்டினார்.அதேபோல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட தவறிவிட்டார் என்பதையும் குறிப்பிட்டார்.

அதாவது, அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளையும், சரிசமமாக பாவிக்கும் வகையில், அவரது பேட்டி அமைந்திருந்தது.ஆனால், ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, ராமதாஸ், 'ரஜினி கட்சி துவக்கட்டும். அவர் நல்ல மனிதர். கூட்டணி குறித்து, டிச., மாதம் நடைபெறவுள்ள பா.ம.க., பொதுக் குழுவில் தான் முடிவு எடுக்கப்படும்' என்றார்.

அதாவது, இரண்டு திராவிட கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது. மக்கள் புதிய சக்தியை எதிர்பார்க்கின்றனர். அந்த சக்தி ரஜினி தான் என, ராமதாஸ் கருதுகிறார்.ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:ரஜினியின் ஆன்மிக அரசியல் மாற்றத்திற்கு ராமதாஸ் ஆதரவு கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

அனைத்து மதம், அனைத்து ஜாதி, அனைத்து மொழியை சமமாக பாவிக்கும் ஆன்மிக அரசியலை, ரஜினி முன்னெடுத்து செல்வதை ராமதாசும் ஆதரிக்கிறார். அதாவது, தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளையும், ஆட்சி மொழியாக்க வேண்டும் என, ராமதாஸ் வலியுறுத்துகிறார்.

அதேபோல், திருமாவளவன் எங்களுக்கு எதிரி அல்ல எனக் கூறியிருப்பதால், ஜாதி வெறுப்பு அரசியலையும், ராமதாஸ் கைவிட்டுள்ளார்.ராமதாஸ் மாற்றத்திற்கு, ரஜினியின் ஆன்மிக அரசியல் தான் காரணம் என, நாங்கள் நம்புகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202006:15:34 IST Report Abuse
 Muruga Vel செந்தில் கவுண்ட மணி மாதிரி காம்பினேஷன்
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
14-செப்-202022:30:47 IST Report Abuse
Nesan ராமதாஸ் ஒரு சந்தர்ப்ப சுயநலவாதி .அவரோடு சேராமல் இருப்பது , ரஜினிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை கொடுக்கும் .
Rate this:
Cancel
14-செப்-202022:08:09 IST Report Abuse
அண்ணா.வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் மத ஜாதி ஆன்மீக அரசியல் சூப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X