கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி புதிய மனு தாக்கல்

Updated : ஜூன் 21, 2011 | Added : ஜூன் 21, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருச்சி : திருச்சி தனியார் கல்லூரி முதல்வர் மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி கோர்ட்டி புதிய மனுவை தாக்கல் செய்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி .இவர் தன்னை செயின்ட்ஜோசப் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் கற்பழித்ததாக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த வழக்கு திருச்சி ஜே.எம்.1 -ல் விசாரணைக்குவந்தது. விசாரணையின் போது கல்லூரிமுதல்வர் ராஜரத்தினம், மதுரையை சேர்ந்ததேவதாஸ், சேவியர், மரியம் மற்றும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சுசீத்ரா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். இவ்வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி தான் முன்னர் பணிபுரிந்த சபையை சேர்ந்த சேவியர் மரிய தங்கத்தை இவ்வழக்கில் சேர்க்க வலியுறுத்தி புதிய மனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே இது குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்பட்சத்தில் மீண்டும் புதிய மனுவை ஏற்க கூடாது என ராஜரத்தினம்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
21-ஜூன்-201112:50:34 IST Report Abuse
s.r.ramkrushna sastri கல்லூரிமுதல்வர்கள், ஆசிரியர்கள் இதுபோன்ற குற்ற சாட்டுகளுக்கு ஆளாவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். மாணாக்கர்களை நன்னெறி படுத்தும் ஆசிரியர்களே இதுபோன்ற பாதகமான செயல்களில் ஈடுபடுவது அருவருக்கத்தக்க செயல். இதுபோன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், யாராயினும் இறக்கம் காட்டாமல், அவர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும். கடுமையான தண்டனை மட்டுமே, இதுபோன்ற செயல்களை செய்ய விடாமல் மற்றவர்களை தடுக்கும் வழியாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X