தழைச்சத்து அதிகம் கிடைக்க உதவி இயக்குனர் ஆலோசனை| தழைச்சத்து அதிகம் கிடைக்க உதவி இயக்குனர் ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தழைச்சத்து அதிகம் கிடைக்க உதவி இயக்குனர் ஆலோசனை

Added : ஜூன் 22, 2011
Share

செய்துங்கநல்லூர் : தழைச்சத்து அதிகம் கிடைக்க இயற்கை உரங்களை விவசாயிகள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். பயிர்களுக்கு அதிக தழைச்சத்து கிடைக்க விவசாயிகள் தக்கை பூன்கு என்ற இயற்கை உரத்தினை பயன்படுத்தலாம் என கருங்குளம் யூனியன் வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தக்கை பூன்கு என்ற புல் வகைப் பயிரினை விவசாயிகள் தற்போது தங்கள் நிலத்தில் விதைக்கலாம். இந்த பயிர் விதையை லேசான ஈரமுள்ள நிலத்தை உழுது அதில் 35 முதல் 40 நாட்களுக்கு பின் அந்த பயிரை மீண்டும் ஒரு உழவு செய்து தங்கள் நிலத்தில் உள் மடிய செய்ய வேண்டும். பின்னர் அந்த நிலத்தில் எந்த பயிரை பயிரிட்டாலும் அதிக பலன் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் பயிருக்கு தழைச்சத்து கிடைக்கிறது. பயிருக்கு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. மண் வளம் அதிகமாக இருக்கும். அந்தக் காலங்களில் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள மரங்களின் குழைகளை அறக்கி தங்கள் விவசாய நிலத்தில் மக்க வைப்பார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் இப்போது நடப்பதில்லை. மரம் கிடைப்பது அரிது. அதிலுள்ள குழைகளை அறக்கி நிலத்திற்கு எடுத்து செல்ல அதிக செலவாவதால் விவசாயிகள் செய்வது இல்லை. எனவே இந்த தக்கை பூன்கு பயிரை பயிரிட்டு விவசாயிகள் அதிக பயன் பெற கேட்டுக் கொள்கிறேன். இந்த பயிரின் விலை கிலோ ரூ.40 ஆகும். இதில் அரசு மானியம் கிலோவுக்கு ரூ.20 போக மீதி ரூ.20 மட்டுமே கிரையம் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 20 கிலோ முதல் 25 கிலோ வரை தேவைப்படும். எனவே தேவைப்படும் விவசாயிகள் எங்கள் அலுவலகத்தை அல்லது களப்பணியாளர்களை அணுகி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X