பொது செய்தி

இந்தியா

கறுப்புபணத்தை ஒழிக்க இ-மெயில் வாயிலாக யோசனை

Updated : ஜூன் 24, 2011 | Added : ஜூன் 24, 2011 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: கறுப்புபணத்தை ஒழித்து கட்டுவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திற்கு தகுந்த ஆலேசானை வழங்க பொதுமக்களிடமிருந்து ஒரே வாரத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ-மெயில்கள் வருகின்றன. வெளிநாட்டு வங்கிகளி்ல் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர கோரியும், ஊழலுக்கு எதிராகவும் அன்னா ஹசாரே, ராம்தேவ் ஆகியோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழித்துக்கட்ட தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சட்டம் கொண்டுவருவதற்கும், வெளிநாட்டு வங்கிகளில் உள்‌ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டுவருவதற்கும் , மத்திய நிதி அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு வாரியத்தலைவரின் கீழ் குழுவை அமைத்துள்ளது. இந்நிலையில் இக்குழுவு பொதுமக்கள் கருத்தினை கேட்டறிய
BM-feedback@nic.in எனும் இ‌-மெயில் முகவரியை வெளியிட்டிருந்தது. ‌முன்னதாக கடந்த ஜூன் 9-ம் தேதியன்று இக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. அப்போது கறுப்புபணத்தை ஒழித்து கட்ட பொதுமக்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிவது எனமுடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைவர் பிரகாஷ் சந்திரா கூறுகையில், குழு உறுப்பினர்கள் , அமலாக்கத்துறையினரிடம் தீவிர ஆலோச‌னை நடத்தி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை கொண்டுவர தகுந்த சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். இதற்கான அடிப்படை கட்டமைப்புகள் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். அடுத்தக்கூட்டம் ஜூலை இரண்டாவது வாரம் நடைபெறும். மேலும் குழுவினர் நடத்திய முதல் கூட்டத்திற்கு பின் ஒரே வாரத்தில் பொதுமக்களிடமிருந்து 1000 இ-மெயில்கள் வாயிலாக ஆலோசனைகள் குவியத்தொடங்கியுள்ளன.இவ்வாறு பிரகாஷ் சந்திரா கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanthagopal Punuscamy - Klang,மலேஷியா
24-ஜூன்-201118:16:06 IST Report Abuse
Nanthagopal Punuscamy To clear off all the tons of BLACK MONEY, the Indian Government must announce that with 6 months grace period all the 500 & 1,000 currency notes will be not valid after that. Therefore all those who holds the Rps500.00 & Rps 1,000 notes are request to bank in to their account by 6 months period. With this announcement, the Indian Government will receive or obtain millions of CRORES is cash from the National THIEFS. This is what happen in Malaysia in the year 1998. Gopal. Klang, Malaysia
Rate this:
Cancel
P.JAYARAMAN - COIMBATORE,இந்தியா
24-ஜூன்-201111:12:55 IST Report Abuse
P.JAYARAMAN மின்னஞ்சல் அனுப்பலாம்! சரி, ஆனால் அந்த மின்னஞ்சல் முகவரியின் கொள்ளளவு எவ்வளவு? குறிப்பிட்ட MB-க்கு மேல் போனால் இடமில்லை என்று அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிவிடுமே? இருந்தாலும் பரவாயில்லை, நான் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு என்னுடைய மனதில் பட்ட யோசனையைச் சொல்லப் போகிறேன். மேலும் ஒன்று, இப்போதிருக்கும் மத்திய அரசை நம்பி எதுவும் சொல்ல முடியாது. மக்கள் கருத்தைக் கேட்கிறோம் என்று பார்த்திபன் வடிவேலு வாயைப் பிடுங்கி "போட்டு வாங்கிய" பாணியில் நம்மிடமிருந்து "கருத்து" கேட்டுவிட்டு, அதற்கேற்ப அவர்கள் தாங்கள் கொள்ளையடித்ததைப் பதுக்கிவிட நூற்றுக்கு இருநூறு சதம் வாய்ப்புள்ளது. காரணம், அரசியல்வாதிகள் அந்தளவுக்கு "நல்லவங்க"!!!!
Rate this:
Cancel
thamil - Madurai,இந்தியா
24-ஜூன்-201106:47:47 IST Report Abuse
thamil கருப்பு பணம் சம்பந்தமான யோசனைகளை இமெயிலில் கேட்பது எந்த வகையில் அமுலாகும் என்பது கேள்விக்குறிதான். முதலில் மத்திய அரசு கருப்பு பணம் பிரச்னைக்கு மட்டும் என தனியான வெப்சைட் வெளியிடவேண்டும். அதில் அனைவரது யோசனைகளையும் பதிவு செய்ய சொல்ல வேண்டும். அந்த யோசனைகளை மற்றவர்களும் பார்க்கும் வசதி இருக்க வேண்டும்.வரைவு மசோதாவும் வெப்சைட்டில் வெளியிடவேண்டும் அதன் பேரிலும் அனைவரது யோசனைகளையும் கேட்க வேண்டும். பின் திருத்த வரைவு மசோதா வெப்சைட்டில் வெளியிடவேண்டும். அதன் பின்னர் அதன் மீது பார்லிமெண்டில் விவாதம் நடக்கட்டும். எந்த எந்த கட்சி மசோதாவை பலவீன படுத்துகிறது எந்த எந்த கட்சி மசோதாவை பலப்படுத்துகிறது என்பதை மக்கள் நேரிடையாக தெரிந்து கொள்ளும் வகையில் விவாதம் live ஆக இருக்கவேண்டும் பின் சட்டம் வரட்டும் சட்டத்தில் கருப்பு பணம் தப்பிக்கும் வகையில் ஓட்டைகள் இருந்தால் வெப்சைட்டில் மக்கள் தெரிவித்த கருத்துக்கள் ஓரம்கட்டப்பட்டு இருந்தால் அதை சுப்ரீம் கோர்ட்டில் முறையிடவேண்டும் வழக்கம் போல் இந்த விசயத்திலும் நிர்வாகத்தை கையில் எடுத்து சட்டம் முழுமையாக இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பார்லிமென்ட்டுக்கு வானளாவிய அதிகாரம் இருந்தாலும் அந்த அதிகாரம் பொதுநலனுக்கு விரோதமாக இருக்க கூடாது.
Rate this:
K Ramesh Babu - Chennai,இந்தியா
25-ஜூன்-201113:21:57 IST Report Abuse
K Ramesh Babuநீங்கள் சொல்வதெல்லாம் நடக்க இருபது வருடமாவது ஆகும் சார் பரவாயில்லையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X