பொது செய்தி

இந்தியா

சோமாலிய கொள்ளையர்கள் பிடியில் சிக்கித்தவித்த மாலுமிகள் நாடு திரும்பினர்

Added : ஜூன் 25, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement
சோமாலிய கொள்ளையர்கள் பிடியில் சிக்கித்தவித்த மாலுமிகள் நாடு திரும்பினர்

புதுடில்லி:"சோமாலிய கடற்கொள்ளையர்கள் குடிபோதையில் எங்களை துன்புறுத்தினர். பல நாட்கள் தொடர்ந்து பட்டினி போட்டனர்' என, அவர்களால் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்ட இந்திய கப்பல் மாலுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.


எகிப்து நாட்டைச் சேர்ந்த சூயஸ் கப்பலை, கடந்தாண்டு சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அதில், இந்திய மாலுமிகள் ஆறு பேர் உட்பட 22 பேர் இருந்தனர். 10 மாதங்கள் பிணைக் கைதியாக இருந்த அவர்களை, கணிசமான பிணைத் தொகையை பெற்றுக் கொண்டு, கொள்ளையர்கள் விடுவித்தனர்.விடுவிக்கப்பட்ட அவர்கள், சூயஸ் கப்பலில் பயணித்த போது, அந்த கப்பலில் எரிபொருள் தீர்ந்து, அது மூழ்கத் துவங்கியது. கப்பலில் இருந்தவர்களை பாகிஸ்தான் கடற்படை மீட்டது. பாகிஸ்தான் கடற்படை கப்பல் மூலம் அந்நாட்டின் துறைமுக நகரமான கராச்சி சென்ற அவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் நேற்று டில்லி திரும்பினர்.டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்த அவர்களை, குடும்பத்தினர் கட்டி அணைத்து, மாலை அணிவித்து, ஆனந்த கண்ணீர் பொங்க வரவேற்றனர்.


பின்னர் விமான நிலையத்தில் மாலுமிகள் கண்கலங்க கூறியதாவது:சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு, எங்களது குடும்பத்தினருடன் இணைய போகிறோம் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. இந்த தருணத்திற்காகவே, 10 மாதங்கள் காத்திருந்தோம். எங்களை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் குடிபோதையில், கையில் கிடைப்பதைக் கொண்டு எங்களை தாக்குவர். பல நாட்கள் தொடர்ந்து பட்டினி போட்டனர். சுதந்திரமாக நடமாட அனுமதிக்கவில்லை.கொள்ளையர்கள் எங்களை கொன்று விடுவர் என்றே நினைத்தோம். அப்படி கொன்றாலாவது துன்புறுத்தலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூட சில தருணங்களில் நினைத்துண்டு. பல நாட்கள் எங்களுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை. சில நாட்கள் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, பட்டினியாக இருந்துள்ளோம். வாரத்தில் ஒரு நாள் அரிசி சாதமும், உருளைக் கிழங்கும் தருவர்.


கொள்ளையர்கள் எங்களை உடல் ரீதியாக துன்புறுத்தினர். அதிலிருந்து விடுபட்டு, சூயஸ் கப்பலில் பயணித்த போது, அதிலும் எரிபொருள் தீர்ந்து, மூழ்கத் துவங்கியது. இது எங்களின் துயரத்தை மேலும் அதிகரித்தது. அந்த நேரத்தில், முடிவு நெருங்கி விட்டது என்றே நினைத்தோம். நல்ல வேளை பாகிஸ்தான் கடற்படையினரால் தப்பித்தோம். அதேநேரத்தில், பாகிஸ்தான் கடற்படையினர் எங்களை கராச்சிக்கு அழைத்துச் சென்ற போது, மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டது போல உணர்ந்தோம். எங்களின் குடும்பத்தினரை சந்திப்போம் என, நினைக்கவே இல்லை. விமானத்தில், கராச்சியிலிருந்து டில்லி வந்து சேர்ந்த பின்னரே நிம்மதி அடைந்தோம். அப்போது தான் எங்களின் துயரமும் முடிவுக்கு வந்ததாக உணர்ந்தோம்.பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அன்சார் பர்னே முயற்சியால் நாங்கள் விடுவிக்கப்பட்டோம். இந்திய, பாகிஸ்தான் பத்திரிகைகளும் நாங்கள் விடுவிக்கப்பட பெரியளவில் உதவின.இவ்வாறு அவர்கள் கூறினர்.


"மாலுமிகளை மீட்க இந்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் பர்னேயை மறக்க மாட்டோம்' என, மாலுமி சத்னம் சிங்கின் தாய் சுரேந்தர் கவுர் கண்ணீர் மல்க கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nanjil hameed - kanyakumari,இந்தியா
25-ஜூன்-201121:21:11 IST Report Abuse
nanjil hameed மிகுந்த சோதனைக்குப்பிறகு நிம்மதியாக தாயகம் திரும்பியோருக்கு நல்வாழ்த்துக்கள்!
Rate this:
Cancel
Desabakthan - San Francisco,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201104:35:39 IST Report Abuse
Desabakthan ஊழல் செய்வதிலும், அதை மறைப்பதிலும், முடிசூடா மன்னர், ராணி ஆட்சியையும் காப்பாற்றுவதில் அவர்கள் மிகவும் முனைப்பாக இருட்பதல் உதவிக்கு வரவில்லை மாலுமிகளே. தவறாக என்ன வேண்டாம்.
Rate this:
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
25-ஜூன்-201103:09:32 IST Report Abuse
GOWSALYA திருமதி.சுரேந்தர் கவுர் கூறியதை வைத்துப் பார்த்தல்,இந்தியர்களை விடப் பாகிஸ்தானியர்கள் மேன்மையானவர்கள் போல இருக்கிறது......எல்லா வித ஆபத்தில் இருந்து த்ப்பியபின்,அகப்பட்டதோ பெரும் ஆபத்தில் என்று எண்ணினார்கள்.ஆனால்,அந்த இடத்தில இருந்து மிக சுலபமா தாயகம் வந்துவிட்டார்கள் அல்லவா? இறைவனுக்கு நன்றிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X