பொது செய்தி

இந்தியா

லோக்பால் மசோதா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹெக்டே "அட்வைஸ்'

Added : ஜூன் 30, 2011 | கருத்துகள் (39)
Share
Advertisement
லோக்பால் மசோதா: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹெக்டே "அட்வைஸ்'

ஹூப்ளி: ""லோக்பால் மசோதா குறித்து முதல்வர் ஜெயலலிதா முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்,'' என, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியும், லோக்பால் மசோதா வரைவு கமிட்டி உறுப்பினருமான சந்தோஷ் ஹெக்டே கூறினார்.


ஹூப்ளியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: லோக்பால் சட்டத்தில் பிரதமரை உட்படுத்த வேண்டாமென்று கூறியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, முதலில் இச்சட்டத்தின் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், எதிர் காலத்தில் அவரே கூட பிரதமராகலாம். லோக்பால் சட்டத்துக்குள் பிரதமரையும் உட்படுத்தினால், தானும் எங்கே சட்டத்தின் பிடியில் சிக்க கொள்வோமோ என்ற பயம் ஜெயலலிதாவுக்கு இருக்கலாம். பிரதமரை லோக்பால் சட்டத்துக்குள் கொண்டு வருமாறு நான் வற்புறுத்தவில்லை. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ உறுப்பினர்கள், பிரதமரையும் இச்சட்டத்திற்குள் கொண்டு வருமாறு வற்புறுத்தி வருகின்றனர். எனவே, இவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றியாக வேண்டும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும், லோக்பால் சட்டத்துக்குள் பிரதமரையும் கொண்டு வரவேண்டுமென கூறியிருந்தார். தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறியுள்ளார். எனவே, பிரதமரை லோக்பால் சட்டத்துக்குள் கொண்டு வருவதில் தவறேதும் இல்லை.


பிரதமர் ஊழலில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே, இந்த மசோதாவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். இல்லையெனில், எந்த பிரச்னையும் இல்லை. எனவே, பிரதமரை லோக்பால் சட்டத்துக்குள் கொண்டு வருவதில் எந்த தவறுதலும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள், லோக்பால் சட்டத்தில் பிரதமரை கொண்டு வர வேண்டும் என வற்புறுத்துவதில், எந்த தவறுமில்லை. தேவையின்றி லோக்பால் மசோதா குறித்து, திசை மாற்றும் அறிக்கைகளை வெளியிடுவதை விடுத்து, முதலில் லோக்பால் குறித்து முழுவதுமாக தெரிந்து கொண்டு பேச வேண்டும். பிரதமர் பதவியை லோக்பால் சட்டத்துக்குள் உட்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் பிரதமராக வருபவர்களுக்கு எளிதாக கூடும் என்ற எண்ணத்தில், மத்திய அரசு இந்த பதவியை இச்சட்டத்திற்குள் கொண்டு வருவதை தவிர்க்கும் விதத்தில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு ஹெக்டே கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
02-ஜூலை-201111:36:20 IST Report Abuse
R.சுதாகர் அது என்ன எல்லோரும் மக்கள் பிரதிநிதிகள் என்று சிலபேரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் ? இவர்கள் ஏன் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார்கள்?. அவ்வப்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார்கள்... யார் இந்த மக்கள் பிரதிநிதிகள் ? எங்கிருந்து திடீரென முளைத்தார்கள்? அப்படியென்றால் கால் கடுக்க வரிசையில் நின்று நாமெல்லாம் ஓட்டுப்போட்டு ஜனநாயகத்தின் அடிப்படையில் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள் இல்லையா ? தவறுகளை சுட்டிக்காட்டத் தானே எதிர்க்கட்சிகள் இருக்கின்றன... ஒரே குழப்பமாக உள்ளதே...
Rate this:
Cancel
nethra - chennai,இந்தியா
01-ஜூலை-201123:41:37 IST Report Abuse
nethra ஏங்க நாங்க கிரிமினல்கள ஏல்லோருக்கும் ஓட்டு போட்டு மந்திரியாக்கியிருக்கிறோம். பிரதமருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டாமா? அடுத்து ஜனாதிபதிக்கும் வாய்ப்பு கொடுங்கப்பூ.
Rate this:
Cancel
Ramacahandran - chennai,இந்தியா
01-ஜூலை-201119:58:48 IST Report Abuse
Ramacahandran நீதிபதி சந்தோஷ் ஹெக்டே போன்றவர்கள் இருப்பதனால் தான் நாட்டில் இன்னமும் நீதி பிழைத்து இருக்கிறது.. பை தி வே அவர் தனது சொத்துக்கணக்கு விவரங்களை காண்பித்து ரொம்ப நாளாச்சு.. தெரியாத விஷயங்களுக்கு கருத்து சொல்லாமல் இருப்பது அதிலும் கடுமையாக விமர்சனம் செய்வது மிகவும் தவறு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X