சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாதிக்பாட்சா கொலையா ? கொலையாளி யார் ? முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வரு‌கை

Updated : ஜூலை 01, 2011 | Added : ஜூலை 01, 2011 | கருத்துகள் (25)
Advertisement
Was A, Raja, associate Sadiq Batcha murdered?, சாதிக்பாட்சா கொலையா ? கொலையாளி யார் ? முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ.,சென்னைக்கு மர�

புதுடில்லி: மாஜி மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திற்கு சி.பி.ஐ.,நெருங்கி இருப்பதாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சமீப காலமாக பாட்சா தற்கொலை செய்து கொண்டார் என்ற நிலையில் இருந்து இப்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பார் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் டில்லியில் இருந்து ஒரு மருத்துவக்குழுவை சென்னைக்கு அனுப்பி வைக்க சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளன. இந்த குழுவின் அறிக்கையின்படி பாட்சாவின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து 2 ஜி ஸ்பெகட்ரம் ஊழலில் சிக்கி தற்போது சிறையில் இருக்கிறார் ராஜா. இவரது நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா. சாதாரண நிலையில் இருந்த இவர் ராஜாவின் கண்பார்வையால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பல கோடிகளுக்கு அதிபதியானார். ராஜாவின் சொந்த பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் முக்கிய இடங்களை விலைக்கு வாங்குவது , விற்று லாபம் சம்பாதிப்பது என தொழில் செய்து வந்தார்.


கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் : இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இந்த சாவு குறித்து துளைத்தெடுத்து வரும் சி.பி.ஐ., விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கொலையாக இருக்குமோ என்ற யூகத்திற்கு சிறிய தடயம் சிக்கியிருப்பதாகவும், இவரது மருத்துவ ரிப்போர்ட்டை ஆய்வு செய்ய டில்லி அகில இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் ஆய்வு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.இவர்களது அறிக்கைக்கு பின்னர் பாட்சாவின் மரணம் குறித்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் திருப்பம் ஏற்படும் பட்சத்தில் , பாட்சாவை கொன்றது யார், கொலைக்கு யார் காரணம், சதிச்செயல்களில் ஈடுபட்டது யார் என்ற கேள்விகள் எழும். இதனையடுத்து ஸ்பெக்டரம் வழக்கில் திடுக் திருப்புமுனைகள் ஏற்படும். பாட்சாவை பொறுத்தவரை ராஜாவிற்கு நெருக்கமானவராக இருந்ததால் இவர் சி.பி.ஐ.,யிடம் அப்ரூவராகி உண்மைகளை சொல்லி விடுவாரோ என்ற அச்சம் சிலருக்கு இருந்ததது இந்த காரணமும் பாட்சாவின் சாவுக்கு ஒரு கருவியாக இருந்திருக்கலாம் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Madurai,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-201123:21:39 IST Report Abuse
Tamilan "கூடா நட்பு கேடாய் முடியும்" இது சாதிக்கு பொருந்தும். நாங்களும் பேசுவோம்ல. தா கிருஷ்ணன் எப்படி அவர அவரை அருவாளால் வெட்டி செத்தாரோ, PTR எப்படி மாரடைப்பால் இறந்தாரோ அப்படிதான் இதுவும். ஒரு ட்ரிப் மதுரைக்கு போனால் இதுக்கு விடை கிடைக்கும். சென்னைய தாண்டி விசாரனை போக மாடேங்குதே.....
Rate this:
Share this comment
Cancel
V.Renganathan - Tiruchy,இந்தியா
01-ஜூலை-201120:11:31 IST Report Abuse
V.Renganathan இந்த மாதிரியான நிலைமை நிலவி வரும் போது ஜஸ்வந்த் சிங்க் கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து supreme கோர்ட் தீர்ப்பில் இவர் கருத்து தெரிவித்து இருப்பது கண்டிக்க தக்கது
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-201118:51:20 IST Report Abuse
Kasimani Baskaran CBI கூமுட்டைகளுக்கு இது தெரிய இவ்வளவு காலம் பிடித்தை நினைத்துப்பார்த்தால் நிச்சயம் இது CBI வேண்டும் என்றே ஆமை வேகத்தில் செயல் படுகிறது தெளிவாக தெரியும். CBI காங்கிரசின் கைப்பாவையாக இயங்கும் ஒரு தேவை இல்லாத அரசு பணத்தை விரயம் செய்யும் அமைப்பு. உலக மகா ஊழல் வழக்கில் அவர்கள் காட்டும் மெத்தனம் உலகம் காணாத ஒற்று. அவர்கள் எழுதிய 80,000 பக்க கதையை யாராவது படமாக எடுத்தால் நல்ல லாபம் வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X