உஜ்ஜைனி : 5 வயது சிறுமி ஒருவர், வெறும் 4 நிமிடங்களில், 150 நாடுகளின் கொடிகள், தலைநகரங்களை கூறி, உலக சாதனை படைத்துள்ளார்.
ம.பி., மாநிலம் உஜ்ஜைனி நகரத்தை சேர்ந்த பாரத் - சங்கீதா தம்பதியினரின் 5 வயது மகள் பிரஷா. கொரோனா ஊரடங்கு காலத்தில், சிறுமியின் உறவினர்கள் கொடுத்த 'வேர்ல்ட் புக்', அவருக்கு கொடிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடுகளின் கொடிகள், தலைநகரங்கள் குறித்து மனப்பாடம் செய்து அதனை நினைவில் பதிய வைத்திருக்கிறார்.

இந்நிலையில், 150 நாடுகளின் பெயர்கள், அவற்றின் தலைநகரங்களை, 4 நிமிடம் 17 விநாடிகளில் கூறிய இச்சிறுமி, புதிய உலக சாதனை படைத்துள்ளார். பல்வேறு நாடுகளின் நாணயங்கள், மொழிகள் மற்றும் அந்நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரின் பெயர்களைக் கற்றுக்கொள்வது தனது அடுத்த குறிக்கோள் என பிரஷா தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE