பொது செய்தி

தமிழ்நாடு

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணை

Updated : ஜூலை 06, 2011 | Added : ஜூலை 04, 2011 | கருத்துகள் (73)
Share
Advertisement

தமிழக மீனவர்களை, பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர். நேற்றும், 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம், விசாரித்து வருகின்றனர்.


கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivananthagurukkal - stockholm,சுவீடன்
06-ஜூலை-201118:19:39 IST Report Abuse
sivananthagurukkal வெள்ளைகாரன் ஆண்டான். இத்தாலி அம்மையார் ஆண்டாங்க. சீனாவும் ஆசைபடுறான் ஆண்டு விட்டு போகட்டுமே. வெள்ளைகரண்டை பெயரை பிள்ளைகளுக்கும் வீதிகளிலும் உள்ளது போன்று சீன மொழி படிச்சு அவங்கடை பேரை பிள்ளைகளுக்கும் வீதிகள் கிராமங்களுக்கும் வைத்து விட்டு போவம். இதனால காங்கிரசுகாரன் சுரண்டினா என்ன. சீனா காரன் சுரண்டினா என்ன. தமில் பேசினால் என்ன. சிங்கலம் பேசினால் என்ன. சீன மொழி பேசினால் என்ன. கலாச்சாரம் அழிஞ்சால் என்ன தலையா மூழ்கி போச்சு. அன்றைக்கு இலங்கை தமிழன் கத்தினான் எங்கள் காதுகளில் விழவில்லை, இன்று நாங்கள் வாய் கிழிய கத்தியும் பிரயோஜனம் இல்லை. சீனக்காரன் இலங்கை கடற்படையுடன் கப்பலில் இருந்ததாக மீனவர்கள் கூறுவார்கள் என்று சிங்கல கடற்படைக்கு தெரியாதா என்ன. சீனாகாரங்கள் இருக்கிறதை இந்திய மீனவர்கள் பார்க்க வேண்டும் என்பதுக்காகத்தான் இந்த கைது நாடகம். அவர்கள் உண்மையாக சீனா படையினரோ அல்லது தொழிலாளிகளோ தெரியாது. இதெல்லாம் மஹிந்த ராஜபக்சேயின் சேட்டைகள். மீனவர்கள் கூறி இந்திய அரசு தன்னிடம் கேட்க வேண்டும். இல்லை அப்படி எதுவும் இல்லை என நான் மறுக்க வேண்டும் இந்திய மீனவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று நான் கூற வேண்டும் அதை எதிர்த்து கேட்க முடியாமல் தமிழக அரசு மௌனமாக இருக்க வேண்டும். என்னை கண்டு இந்தியா நடுங்க வேண்டும் என்று மஹிந்தர் எதிர்பார்க்கிறார். இதெல்லாம் வெறும் பூச்சாண்டி. இலங்கை தமிலர்களைபோல் எங்களை சிறு பிள்ளைத்தனமாக எண்ணி சீண்டி விட்டு இன்பம் காணும் அரக்கர்கள். இராவணன் பரம்பரைகளாக இருக்குமோ. ஆனாலும் இந்தியாவுக்கு இலங்கை என்றால் பயம்தான். இல்லை என்றால் 500௦௦ மீனவர்களை கொன்றுவிட்ட பின்பும் எவ்வளவு பேரை தொடர்ந்தும் கைது செயிர துணிவு அவனுக்கு வருமா. காங்கிரசு தட்டி கேட்காது என்று ராஜபக்சேவுக்கு தெரியும். தமிழனில கை வைச்சா யாரும் கேட்க மாட்டினம் என்று இலங்கை தமிழனில கை வைக்கும் போது இந்திய தமிழன் மௌனமாக இருக்க வேண்டும். இல்லையேல் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப் படுவார்கள் என்பதை மறைமுகமாக கூறுகிறார் மதிப்புக்குரிய ராஜபக்க்சே ஐயா. நீ வாழ்க காங்கிரசு வாழ்க. காங்கிரசை வாழ வைத்த தி.மு.க. வாழ்க. அ.தி.மு.க.வுக்கு காங்கிரசு பயமோ தெரியவில்லை பிடிபட்ட மீனவர்களை விரைவில் மீட்டு தந்து விட்டார்கள். இவர்களையும் வாழ்த்தி விடுவம்.
Rate this:
Cancel
Jac K - Dhelhi,இந்தியா
06-ஜூலை-201112:33:14 IST Report Abuse
Jac K அனைத்துக்கும் காரணம் காங்கிரஸ், திமுக, மலையாள மத்திய அதிகாரிகள். மிகபெரிய தவறை இந்தியா செய்து விட்டது
Rate this:
Cancel
Jac K - Dhelhi,இந்தியா
06-ஜூலை-201112:26:44 IST Report Abuse
Jac K இந்திய உளவுத்துறை என்ன பண்றாங்க.?????????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X