மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் மீனாட்சி தெருவில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 3 போலீசார் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பகுதியில், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த பகுதியில், மதுரை மாவட்ட எஸ்.பி ஆஸ்ரா கார்க் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது ஒரு வீட்டில், பணம் வைத்து சீட்டு விளையாடிய மதுரை ரயில்வே போலீஸ் ராகவன், மதுரை ஆயுதபடை போலீஸ் சுந்தர், விருதுநகர் ரயில்வே போலீஸ் நெப்போலியன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 2,100 பறிமுதல் செய்யப்பட்டது.