‛எமர்ஜென்சி' என்பது பிழை: ராகுல் மனம் திறந்து பேட்டி

Updated : மார் 03, 2021 | Added : மார் 03, 2021 | கருத்துகள் (55+ 23)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛என் பாட்டி இந்திராவால் அமல்படுத்தப்பட்ட ‛ எமர்ஜென்சி' என்பது ஒரு பிழையாகும்,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறினார்.அமெரிக்காவில் உள்ள ‛கார்னெல்' பல்கலைக்கழக பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுஷிங் பாசுவுடன்,காங்., முன்னாள் தலைவர் ராகுல், நேற்று, ‛வீடியோ கான்பரன்ஸ் ' வாயிலாக கலந்துரையாடினார்.அப்போது
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, indhira, indhra gandhi, emergency, இந்திரா, இந்திரா காந்தி, எமர்ஜென்சி,

புதுடில்லி: ‛‛என் பாட்டி இந்திராவால் அமல்படுத்தப்பட்ட ‛ எமர்ஜென்சி' என்பது ஒரு பிழையாகும்,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறினார்.

அமெரிக்காவில் உள்ள ‛கார்னெல்' பல்கலைக்கழக பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுஷிங் பாசுவுடன்,காங்., முன்னாள் தலைவர் ராகுல், நேற்று, ‛வீடியோ கான்பரன்ஸ் ' வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது ராகுல் கூறியதாவது: கடந்த, 1975 முதல், 1977 வரை, என் பாட்டி இந்திராவால் அமல்படுத்தப்பட்ட ‛எமர்ஜென்சி' என்பது ஒரு பிழையாகும். அது, முற்றிலும் பிழை. அது குறித்து, பாட்டி என்னிடம் பல முறை கூறி இருக்கிறார். எனினும் எமர்ஜென்சி காலத்தில் நடந்ததற்கும், தற்போது நம் நாட்டில் நடப்பதற்கும் இடையே, பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன.


latest tamil news
இந்திய நிறுவனங்களின் கட்டமைப்பை கைப்பற்ற காங்., கட்சி என்றும் முயற்சித்தது இல்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், அதை செய்வதற்கான திறன், காங்., கட்சிக்கு இல்லை. எங்கள் கட்சியின் கட்டமைப்பு அவ்வாறு செய்ய அனுமதிக்காது. அதை செய்ய நினைத்தாலும், எங்களால் முடியாது. அந்த கட்டமைப்பில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, அடிப்படையில் சில மாற்றங்களை செய்து வருகிறது. நாட்டின் முக்கிய நிறுவனங்களில் தங்கள் ஆட்களை நிரப்பி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு கவிழ்வதற்கு முன், அவர் என்னிடம் ஒன்று கூறினார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், தன் பேச்சை கேட்காமல் செயல்படுவதாக குறிப்பிட்டார். அரசு நிறுவன கட்டமைப்புகளில் இது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என் தந்தை மரணம், வன்முறை என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (55+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
04-மார்-202112:16:51 IST Report Abuse
Sridhar அப்படி போகிறபோக்கில் 'பிழை' என்று சாதாரணமாக சொல்லி கடந்துவிடக்கூடிய செயலா அது? அதற்க்கு தண்டனை இல்லையா? சரி அதை விடுங்கள் - இந்த மாதிரியான ஒரு பயலை ஒரு தலைவனாக நம் அரசியலில் திணித்துவிட்டு சென்றிருக்கிறாரே அந்த பாட்டி, அதற்க்கே தண்டனை இல்லை. இந்த லட்சணத்தில் இந்த ஆளுக்கு 10 - 14 வயது இருக்கும் போது அந்த பாட்டி அவசரநிலை பிரகடனம் ஒரு பிழை என்று இவனிடம் சொன்னாளாம் கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ இல்லாமல் கேட்பவர்கள் புத்தி அற்றவர்கள் என்ற எண்ணத்தில் பிதற்றுகிறான் என்ன ஒரு கொடுமை இந்திய மக்களுக்கு
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
04-மார்-202108:21:51 IST Report Abuse
Nagarajan D ஏண்டா கிறுக்கா நீங்க என்னைக்கு தொழில் துறை பற்றி கவலை கொண்டீர்கள்? இப்போதும் எதிலும் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் எவ்வளவு கமிஷன் வாங்கலாம் என திட்டம் தீட்டி திருட்டு தனம் செய்து பிழைப்பு நடத்திய கேவலங்கள் உங்கள் குடும்பம்.... காங்கிரஸ் கட்சியை காந்தி நேரு குடும்பம் கொள்ளை அடித்து அதை இந்திரா காங்கிரஸ் என கம்பனியாக மாற்றியதிலேயே உங்க பாட்டியின் வண்டவாளம் தெரியவில்லையா?
Rate this:
Cancel
Sridhar Swaminathan - Edison, New Jersy,யூ.எஸ்.ஏ
03-மார்-202123:56:05 IST Report Abuse
Sridhar Swaminathan எமெர்ஜெனிசி காலத்தின் கடடயம். இப்போ பிசாய் என்று ஒத்துக்கொள்வது தமிழ் நாட்டின் ஓட்டுக்காக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X