பொது செய்தி

தமிழ்நாடு

பரீட்சையை கண்டு பயப்படாதீங்க: தேர்வு பயம் போக்குகிறார் பிரதமர்!

Updated : மார் 05, 2021 | Added : மார் 05, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
கோவை: தேர்வு பயத்தை போக்கும் நிகழ்ச்சியில், பாரத பிரதமருடன் கலந்துரையாட, பள்ளி மாணவர்கள் வரும் 14ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பொதுத்தேர்வு பயத்தில் இருந்து விடுபட்டு, எதிர்கால லட்சிய பாதையில் மாணவர்கள் பயணிக்க, தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், பரீட்சைக்கு பயமேன் (pariksha pe charcha) என்ற தலைப்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
பரீட்சை, தேர்வு பயம், பிரதமர், பிரதமர் மோடி, மோடி

கோவை: தேர்வு பயத்தை போக்கும் நிகழ்ச்சியில், பாரத பிரதமருடன் கலந்துரையாட, பள்ளி மாணவர்கள் வரும் 14ம் தேதிக்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பொதுத்தேர்வு பயத்தில் இருந்து விடுபட்டு, எதிர்கால லட்சிய பாதையில் மாணவர்கள் பயணிக்க, தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், பரீட்சைக்கு பயமேன் (pariksha pe charcha) என்ற தலைப்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். நடப்பாண்டிற்கான இந்நிகழ்ச்சி, கொரோனா காரணமாக, மார்ச் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் இக்கலந்துரையாடலில், நடப்பாண்டு பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம்.

இதற்கு, www.innovate india.mygov.in/ppe2021 என்ற இணையதள முகவரியில், வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் வெற்றி பெறுவோர், தங்களுக்கான கேள்விகளை, 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவு செய்தால், பிரதமர் பதிலளிப்பார்.


latest tamil news



இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தற்போது வரை, 4 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-மார்-202117:44:38 IST Report Abuse
J.V. Iyer எந்த மேடையிலும் மோடிஜி பிட்டை பார்த்து படிப்பதில்லை. திருக்குறள், பாரதியார் பாடல்கள் என்று பாராமல் ஜமாய்க்கிறார். இரவு பகல் பாராமல் தேச நலனுக்காக உழைக்கிறார். மாணவர்களுடன் பேசுகிறார். Time management பற்றி இவரிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். உண்மைகள் இவர் புரியாத புதிர். நாட்டின் பொக்கிஷம்.
Rate this:
வெற்றி நமதே, நிமிர்ந்துவிட்டோம், இனி குனிய மாட்டோம் - DMK வெற்றிபெற பாடுபடுவோம் ,இஸ்ல் ஆப் மேன்
05-மார்-202118:44:16 IST Report Abuse
வெற்றி நமதே, நிமிர்ந்துவிட்டோம், இனி குனிய மாட்டோம்முதலில் இவருக்கு தேர்தல் மீதுள்ள பயம் போக்கிக்க சொல்லுங்க...
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
05-மார்-202114:23:32 IST Report Abuse
Rajas முதலில் நீங்கள் பத்திரிகைகளை சந்தியுங்கள். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லுங்கள். குழந்தைகளை வழி நடத்த கல்வியாளர்கள் இருக்கிறார்கள். இப்போதைய சூழலில் நாட்டை வழி நடத்த தான் ஆளில்லை.
Rate this:
Cancel
05-மார்-202113:24:57 IST Report Abuse
தமிழ் எங்கடா எடக்குமடாக்கா கேள்விக்கேட்ருவாங்களோன்னு பயந்துக்கினு பத்திரிகையாளர்களையே சந்திக்காம இத்தனை வருஷமா டிமிக்கி கொடுத்துனு இருக்கிறவரு மத்தவங்களுக்கு பாடம் எடுக்குறாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X