சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் தேர்வு| சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் தேர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் தேர்வு

Added : ஜூலை 11, 2011
Share
கோவை : இந்தாண்டுக்கான "சிற்பி இலக்கிய விருது' கவிஞர்களான அபி, லீனா மணிமேகலை ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.கவிஞர் அபி(எ) அபிபுல்லா, "மவுனத்தின் நாவுகள்', "அந்தர நடை' உள்ளிட்ட கவிதை நூல்களையும், கவிஞர் லீனா மணிமேகலை "ஒற்றை இலை', "உலகின் அழகிய பெண்' உள்ளிட்ட கவிதை நூல்களையும் படைத்துள்ளனர். இவர்களின் மொத்த படைப்புகளுக்காக விருது அளிக்கப்படுகிறது. மேலும், "சிற்பி

கோவை : இந்தாண்டுக்கான "சிற்பி இலக்கிய விருது' கவிஞர்களான அபி, லீனா மணிமேகலை ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.கவிஞர் அபி(எ) அபிபுல்லா, "மவுனத்தின் நாவுகள்', "அந்தர நடை' உள்ளிட்ட கவிதை நூல்களையும், கவிஞர் லீனா மணிமேகலை "ஒற்றை இலை', "உலகின் அழகிய பெண்' உள்ளிட்ட கவிதை நூல்களையும் படைத்துள்ளனர். இவர்களின் மொத்த படைப்புகளுக்காக விருது அளிக்கப்படுகிறது. மேலும், "சிற்பி இலக்கிய பரிசு' "என் வீட்டுத் திண்ணை' நூலுக்காக கவிஞர் சென்னிமலை தண்டபாணிக்கும், "பெரிய புராணம் புதுக்கவிதை' நூலுக்காக கவிஞர் சத்தியமோகனுக்கும் அளிக்கப்படுகிறது. இரண்டு விருதுகளுக்குரிய ரொக்கபணமும், பாராட்டு சான்றிதழும் வரும் 31ல் நடக்கவிருக்கும் "சிற்பி பவள விழா'வில் வழங்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X